Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அதிக கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது பலமா?

அதிக கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது பலமா?

‛தோல்வி பயத்தில் மிக மிக மோசமான முடிவுகளை எடுக்கிறது தி.மு.க.,'

- பாலு, பா.ம.க., செய்தித் தொடர்பாளர்

மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற தோல்வி பயத்தில்தான், மிக மிக மோசமான, தடுமாற்றமான முடிவுகளை தி.மு.க., எடுத்துள்ளது. மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்த்தது, தோல்வி பயத்தின் உச்சம்.

அசுர பலத்தில் உள்ள அசைக்க முடியாத கூட்டணி என, தி.மு.க., பெருமை பேசி வந்தது. கடந்த லோக்சபா தேர்தலில், வேண்டாம் என ஒதுக்கிய தே.மு.தி.க., போன்ற கட்சிகளை சேர்த்ததன் வாயிலாக, இது தகர்க்கப்பட்டுள்ளது; கூட்டணியே கலகலத்துள்ளது.

தி.மு.க., எது செய்தாலும் ஏற்கும் ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கிய நான்கு தொகுதிகளில், மூன்றில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்துள்ளனர். தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை, ஸ்டாலினுக்கு இல்லை. அதனால் இப்படியெல்லாம் நிர் ப் பந்திக்கின்றனர்.

தோல்வி பயத்தால் ஏற்பட்ட தடுமாற்றத்தில், தி.மு.க., வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, 22 கட்சிகளை கூட்டணியில் சேர்த்துள்ளனர். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தால், கூட்டணியிலிருந்து யாரும் வெளியே வர மாட்டார்கள். தி.மு.க., கூட்டணியில் இருந்தால், எம்.எல்.ஏ., ஆக முடியாது என்பதால் தான் வேல்முருகன் வெளியேறி விட்டார்.

‛சாத்தியப்படும் அனைவரையும் உள்ளடக்கிய கூட்டணியே வெற்றி பெறும்'

- கோபண்ணா, தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர்

கடந்த 2021 சட்டசபை தேர்தலை விட, அ.தி.மு.க., கூட்டணி பலவீனமாக உள்ளது. எனவே, தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் இருக்க முடியாது.

பீஹாரில் பெரிய, சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து தான், பா.ஜ., கூட்டணி வென்றது. தமிழகத்தில் இப்போது நான்கு முனை போட்டி இருப்பதால், எந்த தொகுதியிலும் வெற்றியை நழுவ விட்டுவிடக் கூடாது என்பதில், தி.மு.க., கவனமாக உள்ளது.

அதற்காகவே, ஒரு மாவட்டம், ஒரு தொகுதியில் செல்வாக்குள்ள கட்சியை கூட விடாமல், கூட்டணியில் முதல்வர் ஸ்டாலின் சேர்த்துள்ளார். ஸ்டாலினை பொறுத்தவரை தேர்தல் வெற்றியைத் தாண்டி, தமிழக அரசியல் களத்தில் பா.ஜ.,வை தனிமைப்படுத்த விரும்புகிறார். அதற்கு அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை தி.மு.க.,வில் சேர்த்ததும், தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்ததும், இந்த அடிப்படையில்தான். எனவே, அதிக கட்சிகளை கூட்டணியில் சேர்த்தது தோல்வி பயம் அல்ல; வெற்றிக்கான வியூகம். ஸ்டாலினின் பரந்த மனப்பான்மை, பெருந்தன்மையை காட்டுகிறது.

Advertisement

மார் 25, 2026 04:16 pm

பலம் இல்லை. பாலம்.‌ தோத்துட்டதுக்கு பிறவு அடுத்த கட்சியை கை காமிச்சுட்டு தப்பி ஓடுவதற்கு இந்த பாலம் ரொம்ப உதவியாக இருக்கும்.

Reply Rate this
மார் 25, 2026 11:54 am

வெற்றி கை நழுவி போய் விடும் என்ற பயத்தில் தான் பிரதான கட்சி துக்கடா கட்சிகளை சேர்க்கிறது.

Reply Rate this
மார் 25, 2026 10:24 am

கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்தால் கருத்து வேறுபாடுகள், பொறாமை, தேர்தலில் ஒத்துழைப்பு இன்மை இவையனைத்தும் நிலவும் ........

Reply Rate this
ஒரு மதத்திற்கும் அந்த மதத்தின் தாய் மொழிக்கும் அன்னிய சக்திகளால் ஆபத்து என்று வரும்போது அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது கட்சிகள் கடமை என்று வாக்காளர்கள் கூறுகின்றனர்.
மார் 25, 2026 11:59 am
Rate this
மார் 25, 2026 08:44 am

இது திமுகவின் பலவீனம். இருக்கும் கட்சி நல்ல முறையில் நடத்தினாலே போதும். மேலும் இது கூட்டணியில் பல தோல்விகளை உருவாக்கி உள்ளது. இதுதான் முதல் பலவீனம். அடிமட்டத்தில் தொண்டர்கள் சோர்வடைந்து உள்ளார்கள். இது திமுகவின் தோல்வியை உறுதி செய்யும்.

Reply Rate this
மார் 25, 2026 08:20 am

பலகீனம்...

Reply Rate this
மார் 25, 2026 07:15 am

திமுக, அதிமுக, பீஜெபி கட்சிகளை தவிர எனய தமிழக கட்சிகள் லெட்டர் பேட் கட்சிகள் தான். தனியாக நின்றால் தொகுதிக்கு சில நூறு ஓட்டுக்கள் வாங்கி டெபாசிட் இழக்கும். எனவே உதார் விட்டு பெரிய கட்சியுடன் கூட்டணி என்ற பெயரில் சில சீட் யாசகம் பெற்று சிலதை ஜெயித்து சேவகம் செய்தே ஜீவனம் செய்யும் ஓட்டுண்ணி இவை. தனியாக விட்டால் தானே மடியும். நமது மாநிலத்திற்கு தேவையே இல்லாத கட்சிகள் இவை.
.

Reply Rate this
மார் 25, 2026 06:06 am

அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள் எந்த காட்சியைப் பார்த்தாலும் முதல்வருக்கு பயம் வந்துவிட்டது உடனே அந்த கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா பதவி இப்போதோ அல்லது எதிர் காலத்திலோ கொடுக்க சம்மதித்து, இப்போது திராவிட கட்சியிலேயே நின்று போட்டியிட்டு வெளியேவிடாமல் வெற்றிக்கு வழி வகுக்கிறார் கடைசியில் ஆகப்போவது என்றால் அந்த கூட்டணி நாலா பக்கமும் பிச்சுக்கும் ஜனநாயக கட்சியே அதிக இடங்களை பெற்று ஆட்சியை அமைக்கும் இது நடக்கப்போவது திண்ணம்

Reply Rate this
ராஜ்ய சபையை அரசியல் சாசனத்தை மாற்றி ஒழிக்க வேண்டும்.இதனால் அரசியல் பேரங்கள் குறையும்.
மார் 25, 2026 08:46 am
Rate this