சிரித்துக் கொண்டே அழுகிறோம்: தி.மு.க., அணியில் ம.தி.மு.க., விரக்தி
சென்னை: தி.மு.க., அளித்த தொகுதி எண்ணிக்கையில் திருப்தி அடையாத நிலையில், 'சிரித்துக் கொண்டே அழுவதாக' ம.தி.மு.க., தெரிவித்துள்ளது.
தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இரட்டை இலக்கத்தில் தொகுதியை எதிர்பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடந்த சட்டசபை தேர்தலை விட, ஒரு தொகுதியை குறைத்து தலா ஐந்து தொகுதிகள் தரப்பட்டுள்ளன.
ம.தி.மு.க.,வுக்கு கடந்த முறை ஆறு தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் தற்போது நான்கு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியதோடு, ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டியிடவும், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், புதிதாக கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க.,வுக்கு 10 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்பட்டுள்ளன.
இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சு, தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் துவங்கி உள்ளது. ம.தி.மு.க.,வுக்கான தொகுதிகள் விபரம் குறித்து, இரு தரப்பும் இடையே நேற்று பேச்சு நடத்தப்பட்டது.
நேற்றைய பேச்சுக்கு பின், ம.தி.மு.க., அவைத்தலைவர் அர்ஜுனராஜிடம், தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், ''சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகிறோம். எங்களின் தகுதிக்கு ஏற்ப தொகுதிகள் வழங்கப்படவில்லை,'' என்றார்.
ம.தி.மு.க.,வை தொடர்ந்து, கொங்கு மக்கள் தேசிய கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் தி.மு.க., தரப்பில் பேச்சு நடந்தது.
Advertisement
தொடசுட்டு போயிட்டே இருப்பியா? அதைவிட்டு சும்மா டயலாக் அடுச்சுக்கிட்டு
மே நாளாம் தேதி உங்கள் அழுகை ஆணந்த கண்ணிராக மாறும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
விக்கி விக்கி அழும் நேரம் - உங்களுக்கும் DMK கூட்டணிக்கும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் அலுத்து கொண்டு சிரித்தாலும் சரி, இல்லை சிரித்து கொண்டு அழுதாலும் சரி, தமிழக மக்கள் உங்களை பார்த்து சிரிக்க தொடங்கி பல வருடங்கள் ஆகிறது.
வைகோ சார்... ஏன் மக்களுக்கு சேவை செய்யுற வெறியோட இம்புட்டு கஷ்டபட்டு அழுவுறீங்களே... ஏன் அரசியலுக்கு முழுக்கு போட்டுட்டு...வீட்ல happy ஆ இருக்கக்கூடாது??
ம தீ மூ கா உருப்படாத கட்சியினு பெயர் சீட்டு கம்மினு அழுகிறோம் அதே நேரத்தில் பெட்டியை வாங்கும் போது சிரிக்கிறோம்.
பல தலைமுறைக்கு சொத்து சேர்த்தாச்சு. எப்படியும் ஓய்வூதியம் வேற கூடுதலா வரும். இதுக்குப்பிறகும், இந்த பிழைப்பு தேவையா ??

சிலர் சிரிப்பார்..... சிலர் அழுவார்..... சிலர் சிரித்து கொண்டே அழுவர்.....