பெ.நா.பாளையத்தில் ஓட்டுப்பதிவு உறுதிமொழி
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுப்பதிவை அதிகரிக்க, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி உறுதிமொழி எடுத்தல், கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல், கட்டுரை போட்டிகள் நடத்துதல் உட்பட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில், துப்புரவு தொழிலாளர்கள் அலுவலக ஊழியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர், தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றனர். பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சுகாதார அலுவலர் பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்