Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 விஜய் அறிவிப்பு வெத்து வேட்டு: அமைச்சர் கீதா ஜீவன் தாக்கு

 விஜய் அறிவிப்பு வெத்து வேட்டு: அமைச்சர் கீதா ஜீவன் தாக்கு

துாத்துக்குடி: “த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை வெத்து வேட்டு,” என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

துாத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி:

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைவருக்குமான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி செய்து கொண்டு வருகிறார்.

சொன்னதை செய்வது மட்டுமல்லாமல், சொல்லாததையும் செய்கிற தி.மு.க.,வைத்தான் மக்கள் நம்புவர்.

த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை அறிவிப்புகள் அனைத்தும் வெத்து வேட்டு என்று தான் சொல்ல வேண்டும். ஒரே உதாரணம் சொல்கிறேன். 'பெண்கள், குழந்தைகள், முதியோருக்காக தனித்துறை' என விஜய் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, பெண்கள், குழந்தைகள் முதியோர், திருநங்கையருக்கான தனித்துறையாகத்தான் சமூக நலத்துறை இருக்கிறது. இது கூட தெரியாமல் இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மார் 08, 2026 12:00 pm

ஓரே மதம். கிறிஸ்தவர்கள் ஓட்டு. இனிமேல் இந்த அமைச்சர் தான் விஜய்க்கு தேர்தல் வரை பதில் தருவார்.

Reply Rate this
மார் 08, 2026 07:17 am

நீங்கள் 2021 கொடுத்து மக்களை ஏமாற்றி வாங்கிய வாக்கு ஞாபகம் இருக்கிறதா? இதை சொல்லுவதற்கு ஒரு அருகதை வேணும். கேவலம்.

Reply Rate this