த.வெ.க., நிகழ்ச்சியில் நடனம்; ஆசிரியை 'சஸ்பெண்ட்'
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பின்னையூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றினார்.
கடந்த சில நாட்களுக்கு முன், ஒரத்தநாட்டில் த.வெ.க., மகளிர் தின விழாவில் பங்கேற்ற அவர், விஜய் நடித்த திரைப்பட பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நன்னடத்தை விதியை மீறி அரசியல் கட்சி விழாவில் பங்கேற்றதற்காக, அவரை சஸ்பெண்ட் செய்து, பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன், கடந்த 24ம் தேதி உத்தரவிட்டார்.
இது குறித்து தலைமையாசிரியை கூறுகையில், “நான் ஆண்டுதோறும் மகளிர் விழா நடத்துவது வழக்கம். த.வெ.க., நடத்திய தனியார் மண்டபத்தில், அவர்களின் விழா முடிந்த உடன், நான் ஏற்பாடு செய்த விழாவில் தான் ஆடினேன். அப்போது, த.வெ.க., பிளக்ஸ் பேனர் அகற்றப்படவில்லை. இதனால், நான் த.வெ.க., நிகழ்ச்சியில் ஆடியதாக சஸ்பெண்ட் செய்துள்ளனர்,” என்றார்.
Advertisement
ஒரு தேசத்தை சிதைக்க வேண்டுமானால் முதலில் அதன் ஆணிவேரான கல்விமுறையை, கலாச்சாரத்தை சிதைக்க வேண்டும் என்று திட்டமிட்டு திராவிஷம் 60 ஆண்டுகளில் தமிழகத்தை சிதைத்து இருக்கிறது.
மாதா, பிதா, குரு, தெய்வம்...னு சொல்லுவாங்க பெரியவங்க...? குரு என்பவர் எதிர்கால சந்ததியினரான இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக... முன்மாதிரியாக இருக்க இருக்க வேண்டும்...
What a government, they do not do anything to teachers and faculty who literally indulge is sexual crimes or forced conversions, but suspends teachers for dancing to a song
எதையும் சரிவர விசாரிக்காமல் விமர்சனம் செய்வது தவறு ..அந்த ஆசிரியர் ஒரு நடன கலைஞர். விஜயின் அரசியல் கூட்டத்துக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்று தெரிகிறது. விஜய் கூட்டம் முடிந்த பிறகு அதே மண்டபத்தில் இவரது நடன நிகழ்ச்சி நடந்ததாக தெரிகிறது. இரண்டையும் முடிச்சுபோடுவது மிகவும் தவறு. அவர் விஜய் சினிமா பாட்டுக்குத்தான் ஆடினார் என்று சரியாக தெரியுமா?
விஜய் நம்பி போக வேண்டாம் கமலஹாசனும் மக்கள் நீதி மையம் எந்த நிலையில் அவர்களின் நம்பி வந்தவர்களை விட்டுச் சென்றதோ அதே மாதிரி விஜயும் தவெகவும் உங்களை நடுத்தெருவில் நிறுத்தும்
த வெ க வை கண்டு அஞ்சி நடுங்கும் தி மு க வின் பிரதிபலிப்பு தான் இது. இது தாண் த வெ க.
முப்பெல்லாம் நல்ல ஆசிரியர்கள் ஒழுக்கமான ஆசிரியர்கள் அனைத்து பள்ளிகளில் பணி புரிந்தனர். இப்பொது சலுகை பெற்று ஆசிரியர்கள் ஆகும் நிலை. ஆசிரியரும் மது குடிக்கிறார்க்கள். மாணவனும் மது குடிக்கிறார். திராவிட மாடல் வளர்ச்சி இதுதான்
தரம் கெட்ட ஆசிரியை. ஆசிரியர் வேலைக்கு வருவதற்கு முன் மேடைகளில் குத்தாட்டம் போட்டவராக இருந்திருப்பர்.
அவரைப் பணிநீக்கம் செய்வதால் என்ன பயன்? அவருக்கு ஏற்கனவே 58 வயதாகி, ஓய்வு பெறும் வயதை நெருங்கிவிட்டார். ஆனால் அவர் செய்தது தவறு. ஒரு தலைமை ஆசிரியையாக அவர் ஒரு தார்மீக முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

Wretched lady Think she ll go to any extent