Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


உதய - கனி பைசல் ஆகுமா?

உதய - கனி பைசல் ஆகுமா?

- நமது நிருபர் -

2024 லோக்சபா தேர்தல் நேரம்.

கடந்த 2007 முதல் இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்துவிட்டு; 2019 லோக்சபா தேர்தலில், துாத்துக்குடி தொகுதியில் 3.47 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த தி.மு.க., துணைப் பொதுச் செயலர் கனிமொழி, 'இந்த முறை போட்டியிட எனக்கு விருப்பமில்லை' என்று தி.மு.க.,வின் மூத்த தலைவர்களிடம் தெரிவித்தார்.

'இண்டி' கூட்டணி மிக வலுவாக உருவெடுத்துக்கொண்டு இருந்தது. காங்., தலைவர் ராகுலின் பஸ் பயண பிரசாரத்திற்கு அபார வரவேற்பு இருந்தது. இப்படி அனைத்தும் கூடி வரும் நேரத்தில் வாய்ப்பை வேண்டாம் என்கிறாரே என்று அனைவருக்கும் ஆச்சரியம்.

அந்த நேரம் தான், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்ற பேச்சு வலுவாகிக்கொண்டு இருந்தது. உதயநிதி வட்டத்தாருக்கும், குடும்பத்தாருக்கும் 'கனிமொழி மாநில அரசியலில் ஈடுபட்டு உதயநிதிக்கு போட்டியாக வர திட்டமிடுகிறாரோ' என்ற சந்தேகத்தால் புழுக்கம் ஏற்பட்டது.

அவர்கள், முதல்வரிடம் கவலை தெரிவிக்கவே, 'இந்த முறை, நம் இண்டி கூட்டணி தான் ஆட்சிக்கு வரும். காங்கிரஸுக்கு அடுத்த இடத்தில் தி.மு.க.,விடம் தான் சீட் இருக்கும். அதனால், நமக்கு துணை பிரதமர் பதவி உறுதி. அந்த பதவி உனக்குத்தான். டில்லியின் அரசியல் நெளிவு சுழிவுகள் உனக்குத்தான் தெரியும்' என்று, ஸ்டாலினே கனிமொழியை சமாதானப்படுத்தி அனுப்பினார்.

அதன் பின் தான் தேர்தலில் போட்டியிட கனிமொழி சம்மதித்தார். முந்தைய தேர்தலைவிட இன்னும் அபாரமாக, 3.92 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், எதிர்பார்த்த அளவு, 'இண்டி' கூட்டணி தேசிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் கனிமொழி ஏமாற்றம் அடைந்தார். அவரது கவனம் மீண்டும் மாநில அரசியல் மீது திரும்பியது.

உரசல்


ஆனால், உதயநிதி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் ஓரங்கட்டப்பட்டு, ஒருவரை ஒருவர் தவிர்க்கும் சூழல் உருவானது. இதனால், இருவருக்கும் இடையே உரசல் என்ற நிலை கட்சியினர் மத்தியில் உறுதிப்பட்டது. கனிமொழியை சுற்றி, கடைக்கோடி தென் மாவட்டங்களில் ஓர் அணி வலுவாகத் துவங்கியது.

இதன் தொடர்ச்சியாக, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனிமொழி தன் செல்வாக்கை வளர்க்க உழைத்து வருகிறார். குறிப்பாக துாத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் ஆகிய திட்டங்கள் வருவதில் முக்கிய பங்காற்றினார்.

டில்லி நிலவரத்தை கூர்ந்து கவனித்து வரும் கனிமொழி, 'பா.ஜ., மிகவும் வலுவாக இருக்கிறது. குறைந்தது, இன்னும் 10- - 15 ஆண்டுகளுக்கு, மத்தியில் அவர்கள் கோலோச்சுவர் என்பது போல் தான் தெரிகிறது' என்று தன் வட்டத்தில் தெரிவித்துள்ளார். டில்லியில் அமைச்சர் பதவி வெகு துாரம் என்ற நிலை இருப்பதால், தமிழகத்தில், ஆட்சியில் பங்காற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கனிமொழி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அதனால் தான், திருச்செந்துார் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக, அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மக்கள் பணிகளையும் செய்து முடித்திருக்கிறார். கனிமொழியின் விருப்பத்திற்கு ஏற்ப, திருச்செந்துார் எம்.எல்.ஏ.,வாக உள்ள அனிதா ராதாகிருஷ்ணனும், உடல் நிலை காரணமாக, வரும் தேர்தலில், தான் போட்டியிட விரும்பவில்லை என கட்சி தலைமையிடம் தெரிவித்தார். இதெல்லாம் கட்சி தலைமைக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

பேச மறுப்பு


ஸ்டாலினை சந்தித்து கனிமொழி தன் கோரிக்கையை வைத்தபோது, 'பார்க்கலாம்' என்று மட்டும் சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிட்டார். திருப்தி அடையாத கனிமொழி, அது பற்றி பேச, மீண்டும் சந்திக்க பல முறை முயற்சித்தும், ஸ்டாலின் தவிர்த்துவிட்டார்.

தற்போது, ஸ்டாலின் மட்டுமல்ல, அவர் குடும்பத்திலும் கனிமொழியிடம் யாரும் முகம் கொடுத்து கூட பேசுவதில்லை என, கனிமொழி ஆதரவாளர்கள் புலம்புகின்றனர். அதனால் தான், தென் மாவட்ட தொகுதி வேட்பாளர் நேர்காணலுக்கு கனிமொழி அழைக்கப்படவில்லை.

இதற்கிடையில், நாடார் சங்கங்களை சேர்ந்தோரும், கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும், கனிமொழியை சந்தித்து, 'இம்முறை எப்படியாவது நீங்கள் போட்டியிட வேண்டும்' என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தன் எளிமையான அணுகுமுறையால், கட்சியை கனிமொழி தன்வயப்படுத்தி விடுவார் என்று பதறுவோரின் கை ஓங்கும் நிலை தான் இன்று இருக்கிறது. உதயநிதிக்கும் கனிமொழிக்கும் பைசல் ஆனால் தான் நிலை மாறும் என்று தெரிகிறது.

Advertisement

மார் 23, 2026 01:25 pm

திமுக வுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் கொள்கை, கோட்பாடுகளுக்காக இணைந்த கட்சிகள் இல்லை மாறாக பணம் மற்றும் பதவிக்காக பசை போட்டு ஒட்டப்பட்ட கட்சிகள் ஆகும்.

Reply Rate this
மார் 23, 2026 12:53 pm

தூத்துக்குடி சென்னைக்கு இன்னொரு ரயில் விட ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லை. ஒரு உருப்படியான திட்டம் தூத்துக்குடிக்கு இதுவரை இல்லை. இந்த பதிவில் கூறிய திட்டங்கள் எல்லாம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டவை இதில் இவர் பங்கு என்ன. மொத்தத்தில் தொகுதிக்கு ஒன்றும் செய்யாத இவரை திரும்ப திரும்ப தேர்ந்தெடுக்கின்ற மக்களைத்தான் குறை சொல்லவேண்டும்

Reply Rate this
மார் 23, 2026 12:39 pm

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், குல சேகரப் பட்டிணம் ராக்கெட் ஏவு தளம் இவைகள் நாடு தழுவிய வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்ட பி.ஜே.பி அரசின் சாதனைகள். இதில் கனி மொழியின் பங்கு எதுவும் இல்லை. உண்மையிலேயே இது போன்ற வளர்ச்சியில் தி.மு.கவிற்கு நாட்டமும், அக்கறையும் இருந்திருந்தால் அவர்கள் மத்திய அரசில் தொடர்ச்சியாக அங்கம் வகித்த 1999 முதல் 2014 வரையிலான கால கட்டத்திலேயே இத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்திருக்கும்.

Reply Rate this
மார் 23, 2026 10:29 am

நாடார் சங்கத்தில் உள்ளவர்கள் நாடார் தானா?

Reply Rate this
மார் 23, 2026 10:29 am

உபயம் கட்டுமரம்

Reply Rate this
மார் 23, 2026 09:09 am

காஞ்சிபுர தேர்தல் மனுவில் தனது பெயரை அண்ணாதுரை முதலியார் எனக் குறிப்பிட்டிருந்ததை ஈவேரா கிண்டலடித்து சிலருக்கு முதலியார் எனும் வாலு முளைத்து விட்டது என்றார். போலி சாதி ஒழிப்பு. மற்றபடி கனி கிராமணியா, நாடாரா அல்லது இசை வேளாளரா என்பது அவரவர் யூகம்.

Reply Rate this
மார் 23, 2026 05:17 am

கனிமொழிக்கும் நாடார் சங்கத்திற்கும் என்ன சம்பந்தம்.

Reply Rate this
மார் 23, 2026 04:24 am

தி.மு.க. கூட்டணியில் தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளையும் வளைத்து போட்டு மிக பலமான கூட்டணி என கூறி கொண்டிருந்த கட்சிகள் உண்மையில் ஓரணியில் செயல்படும் கட்சிகள் இல்லை என்பதையும் அனைத்துமே பதவி மோகம் பிடித்த பலகீனமான கட்சிகள் தான் என்பதை நிரூபித்து காட்ட விட்டன. ஆக தமிழகத்திற்கும் டெல்லிக்கும் தான் போட்டி என கூறி வந்த ஸ்டாலின் தற்போது அவரது கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுடன் தான் போட்டி என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளார். திராவிட மாடல் என்பது இப்படி தான் இருக்கும் என்பதை மக்களும் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள்.

Reply Rate this