Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 'சீலா கருவாடு; சீக்கிரம் அனுப்பு'

 'சீலா கருவாடு; சீக்கிரம் அனுப்பு'

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தொதல், முந்திரி பருப்பு அல்வா, கலகலா, தம்மடை, வெள்ளரியாரம், எள்ளு கொழுக்கட்டை, புல்லு கொழுக்கட்டை, கருப்பட்டி மற்றும் சீனி ஓட்டு மாவு, சீபாபணியாரம், நெய் மைசூர்பாகு, சோன்பப்டி உள்ளிட்ட பழமையும் பாரம்பரியமும் மிக்க தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இவற்றை உரிய முறையில் 'பேக்கிங்' செய்து அங்கிருந்து மதுரை, திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளின் அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

அதனுடன் சீலா கருவாடும் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது தேர்தல் காலம் என்பதால், அங்கு ஆய்விற்கு வரக்கூடிய தேர்தல் உயர் அலுவலர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள், 'கீழக்கரையில் என்னப்பா விசேஷம், அதை முதலில் பேக்கிங் செய்து அனுப்புங்கள்' என அன்பு கட்டளை இடுகின்றனர்.

இதையடுத்து அங்கிருந்து சீலா கருவாடு உள்ளிட்ட அனைத்து தின்பண்டங்களும் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.

Advertisement