Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரத்தில் களமிறங்க பிரேமலதா திட்டம்

 தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரத்தில் களமிறங்க பிரேமலதா திட்டம்

- நமது நிருபர் -
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தேர்தலில் போட்டியிடாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., - நாம் தமிழர் - த.வெ.க., என நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தி.மு.க., கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.,வுக்கு, ராஜ்யசபா சீட் ஒதுக்கிய நிலையில், கூடுதல் தொகுதிகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தி.மு.க., கூட்டணியில் நீடிக்கும் வி.சி., - இந்திய கம்யூ., போன்ற கட்சிகள் அதிருப்தியில் உள்ளன.

இந்நிலையில், விஜயகாந்த் வெற்றி பெற்ற விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதாவும், விருதுநகர் அல்லது சாத்துார் தொகுதியில் அவருடைய மகன் விஜய பிரபாகரனும் போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது. அதுபோல், தி.மு.க., கொடுத்த ராஜ்யசபா சீட், பிரேமலதா சகோதரரும், கட்சியின் பொருளாளரான சுதீஷூக்கு வழங்கப்பட்டது.

இதனால், 21 ஆண்டுகளாக கட்சியில் உழைப்பவர்களுக்கு எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் உள்ளனர்.

இந்த நிலையில், பிரேமலதாவும் தேர்தலில் போட்டியிட்டால், அவர் மீது கட்சியினர் வெறுப்படையக் கூடும் என்பதால், இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து, தி.மு.க., கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட பிரேமலதா முடிவெடுத்துள்ளார்.

இது குறித்து அக்கட்சியினர் கூறுகையில்,''அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணையும் என எதிர்பார்த்த நிலையில், திடீரென தி.மு.க.,வுடன் பிரேமலதா கூட்டணி அமைத்துவிட்டார்.

''அவரது தம்பி சுதீஷ், ராஜ்யசபா எம்.பி.,யாகி விட்ட நிலையில், பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் சட்டசபைத் தேர்தலில் களமிறங்கினால், கட்சியில் இருப்போர் கடும் எரிச்சல் அடைவர்.

''இது மற்ற தொகுதிகளில் போட்டியிடக் கூடிய தே.மு.தி.க., வேட்பாளர்களையும் பாதிக்கும். அதனால், இந்த தேர்தலில் போட்டியிடாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட பிரேமலதா முடிவு செய்துள்ளார்,'' என்றனர்.

Advertisement

மார் 22, 2026 05:32 pm

D.M.K KUUUUUUUUU thavai illatha ANEEEEEEEEEEEEE

Reply Rate this
மார் 22, 2026 02:16 pm

அவல் கிடைத்துவிட்டது .உமி தானே சும்மா ஊதி தள்ளிடுவுமுல .

Reply Rate this
Senthoora - Sydney
பாஜகவுக்கு அடிமை ஆவதைவிட இது மேல்.
மார் 22, 2026 05:42 pm
Rate this
duruvasar - indraprastham
திமுகவுக்கு அடிமை ஆன்னதால் கூடுதலாக எவ்வளவு கொம்பு முளைத்திருக்கிறது. விளக்குங்கள் ஐயா
மார் 22, 2026 08:18 pm
Rate this
மார் 22, 2026 01:40 pm

தனக்கு வேண்டிய ராஜ்யசபா சீட் கிடைச்சாச்சு எப்படியும் அசம்பளி தேர்தல்ல ஒன்னு கூட தேறாது டெபொசிட்க்கூட கிடைக்காது அதுக்குஅப்புறம் எதுக்கு இந்த வெயில்ல அலையனும் வாங்கின போட்டி மேல ஒரு மெத்தையை போட்டு ஏ சி யப்போட்டு சுகமா இருக்கறதை விட்டு எதுக்கு வீணா அயனும்

Reply Rate this

ஐந்து சதவிகிதமாவது வாக்குகள் பெற முடியாத மாநிலக் கட்சிகளைத் தடை செய்யவேண்டும் .......

Reply Rate this
மார் 22, 2026 10:14 am

விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது.

Reply Rate this
மார் 22, 2026 09:44 am

அடி சக்கை நல்ல சாமர்த்தியம் இந்த அம்மாவிற்கு வேண்டிதை பெற்றாகிவிட்டாங்க ஒரு ராஜ்யசபா பதவி கூட்டணி கட்சிகள் யாருக்குமே கிடைக்காத வரப்பிரசாதம் இனி ஆறு வருடங்களுக்கு அசைக்க முடியாது இனி எந்த கட்சியிலும் சேரலாம். மாநில சட்டசபை தேர்தலில் அதிகமாக பணம் செலவு செய்து ஒரு சீட்டுகூட வாராது என்று முழு நம்பிக்கை இந்த அம்மா சொல்லாமே மனதில் இருக்கிறது து அதை இப்போது நிரூபிக்கத்தான் தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க. விற்கு பிரச்சாரம் செய்கிறேன் நான் என்று முன்வந்துள்ளார் இவர் பிரச்சாரம் செய்துதான் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டுமா என்ன சாமர்த்தியம் இந்த பெண்மணிக்கு இவரால் கூட்டணிக்குள்ளேயே ஒரு குழப்பம் உண்டாகிவிட்டது

Reply Rate this
மார் 22, 2026 07:35 am

இந்த தேர்தலில் தோல்வி உறுதி என்ற மனவலிமையுடன் இருக்கும் பெண்மணி பெட்டி பிரேதலதா.

Reply Rate this
மார் 22, 2026 05:57 am

தேர்தல் போட்டியிட்டால் டெபாசிட் கிடைப்பது கஷ்ட்டம் அதை எப்படி சொல்கிறார் பாருங்கள் திமுக பாவம் இந்த அம்மா பிரச்சாரம் செய்து ஜெயிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டது

Reply Rate this
மார் 22, 2026 05:44 am

தோல்வி பயம். பணம் இழப்பு

Reply Rate this
Senthoora - Sydney
யாருக்கு பாஜவுக்கா?
மார் 22, 2026 05:43 pm
Rate this