கட்சி பதவி விலகல் விவகாரம்; மாணிக்கம் தாகூர் விளக்கம்
- நமது நிருபர் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில், தன் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிந்ததும், காங்கிரஸ் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, நேற்று முன்தினம் மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறியதாக தகவல் வெளியானது.
அதற்கான ராஜினாமா கடிதத்தை, டில்லி மேலிட தலைவர்களுக்கு அனுப்பியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், 'நான் ராஜினாமா செய்யவில்லை' என, தனியார் 'டிவி'க்கு அளித்த பேட்டியில் மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார். இதனால், கட்சி பதவியை அவர் ராஜினாமா செய்தாரா, இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், அவர் வீடியோ வெளியிட்டு அளித்துள்ள விளக்கம்: தேவையில்லாத குழப்பம் உருவாகி உள்ளது. என்னை பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சிக்கு என்னால் சிரமம் வரக்கூடாது. சில பொறுப்புகள் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தன; தேர்தல் சம்பந்தப்பட்டது என்றாலும் அது, மாநில அளவிலான பொறுப்பு. அந்த பொறுப்பில் தொடர விரும்பவில்லை.
இதை, கட்சித் தலைவர் கார்கேவிடம் தெரிவித்து விட்டேன். இந்த முடிவு, மார்ச் 28ம் தேதி இரவு எடுத்தது. இதில், வேறு எந்த குழப்பமும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement
ஓசியில சாப்பாடு, டெல்லி போக வர இலவசம், தங்க இலவசம் என்று இத்யாதிகள் பலப்பல. இது போதாதுதுன்னு காங்கிரஸ்ங்கிற கம்பெனி மூலம், சதாசர்வகாலமும், தான் எப்படி பயனடையலாம்ன்னு நெனப்பு ஒண்ணுதான் இவங்களுக்கு. ரொம்ப காலமா டெல்லிலேயே இருக்காரு வேற
மக்களுக்கு ஏதாவது தொண்டு செய்யுங்கடான்னா, வரும் பாரு கோவம் இவங்களுக்கு. என்னமோ சாதிச்சுட்ட மாதிரி. துரைங்களுக்கு எல்லாம் நாடாவது பற்றாவது.
இதன் மூலம் புரிவது என்னவென்றால், காந்தி, தாகூர், நேரு ஆகிய பெயரனைத்தும், நன்கு சம்பாதிக்க பயன்படுகிறது, என்பதே
ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்
தொகுதி ஒதுக்கீட்டின் வரவான ஸ்வீட் பெட்டிஎன்கிற செல்வம் மூலம் பெருந்தொகை தனக்கு வராமல் போனதுதான் மிக வருத்தமே

அந்த பக்கம் ஓரமா போய் விளையாடுங்க.