Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 தேர்தல் விதிமீறல் ரூ.43.6 கோடி பறிமுதல்

 தேர்தல் விதிமீறல் ரூ.43.6 கோடி பறிமுதல்

சென்னை: தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக, 43.6 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

தேர்தல் செலவின கண்காணிப்பு நடவடிக்கை காரணமாக, 18ம் தேதி நிலவரப்படி, 43.6 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

அதில், 2.37 கோடி ரூபாய் ரொக்கம், 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், 2.88 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள், 16.4 கோடி ரூபாய் மதிப்பிலான விலை மதிப்பற்ற உலோகங்கள், 20.8 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement