Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


ஆன்லைனில் எளிதாக வேட்பு மனு தாக்கல் செய்வது எப்படி; வேட்பாளர்களுக்கு இதோ வழிமுறைகள்!

ஆன்லைனில் எளிதாக வேட்பு மனு தாக்கல் செய்வது எப்படி; வேட்பாளர்களுக்கு இதோ வழிமுறைகள்!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: தேர்தல் கமிஷனால் உருவாக்கப்பட்ட சுவிதா ஆப்பில் புதிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் ஆன் லைனிலேயே வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். அதற்கான வழிமுறைகளும் வெளியாகி இருக்கின்றன.
நாடு முழுவதும் தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளன. தமிழகத்தில் இம்மாத இறுதியில் (மார்ச் 30) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
ஏப்.6ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இம்முறை வேட்பு மனு தாக்கல் செய்ய அதற்கான அலுவலகத்தில் வேட்பாளர்கள் கூட்டம் அலைமோதும். அதே நேரத்தில், வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை ஆப் மூலம் தாக்கல் செய்ய தேர்தல் கமிஷன் சுவிதா ஆப் என்ற செயலியை உருவாக்கி அதை மேம்படுத்தி உள்ளது.
ஆன்லைன் வேட்பு மனு தாக்கல் என்ற நடைமுறை ஏற்கனவே பயன்பாட்டில் இருந்தாலும் அதில் வேட்பாளர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் வசதி கடினம் என்பதே அதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து, தற்போது ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுவிதா 2.0 (Suvidha 2.0) செயலி மூலம் மனு தாக்கல் செய்யலாம். இந்த செயலில் எப்படி வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்பதை இங்கே காணலாம்.
* Suvidha 2.0 ஆப்பை வேட்பாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் தங்களின் மொபைல் எண் மற்றும் ஓடிபி எண் மூலம் முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
* அதன் பின்னர் வேட்பாளர்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் என தனிப்பட்ட விவரங்களை உள்ளீடு செய்யவேண்டும். பிறகு உறுதிமொழி பத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும். வேட்பு மனு படிவத்தின் தரவுகளை உள்ளீடு செய்யவேண்டும்.
* தேவையான ஆவணங்களை பதிவேற்றி, அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி விட வேண்டும்.
* தேர்தல் அதிகாரியுடன் ஆவணங்களை நேரில் சரிபார்க்க, தேதி மற்றும் நேரம் (முற்பகல் 11 மணி முதவ் பிற்பகல் 3 மணிக்குள்) தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
தற்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி எளிதாக, விரைவாக வேட்பு மனு தாக்கல் செய்யவே ஆன்லைன் வசதியை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்திருக்கிறது. கடந்தமுறை போல் அல்லாமல் இம் முறை இதுபோன்ற வசதியை வேட்பாளர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
அதே சமயத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு ஒருநாள் முன்னதாக இணையவழி வேட்புமனு தாக்கல் வசதி மூடப்படும் என்பதை வேட்பாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Advertisement

மார் 17, 2026 09:00 pm

பனையூரில் இருந்து கொண்டே விஜய் வேட்பு மனு தாக்கல் செய்வார்

Reply Rate this
மார் 17, 2026 08:34 pm

சுவிதா - எளிதானது என்று பொருள் தரும் இந்தி திணிப்பு ஆப்ஐ எதிர்த்து ஆளும் கூட்டணி கட்சியினர் பலர் வேட்புமனு தாக்கல் செய்யாமல் புறக்கணிப்பு செய்யலாம்!

Reply Rate this