Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தேர்தல் அறிக்கை, பிரசாரம், வேட்பாளர் பட்டியல்; அனைத்திலும் முதலில் களமிறங்கிய இபிஎஸ்

தேர்தல் அறிக்கை, பிரசாரம், வேட்பாளர் பட்டியல்; அனைத்திலும் முதலில் களமிறங்கிய இபிஎஸ்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: எதிர்க்கட்சியாக இருந்தாலும் தேர்தல் அறிக்கை, பிரசாரம் மற்றும் வேட்பாளர் பட்டியல் என 2026 சட்டசபை தேர்தலில் இபிஎஸ் படு ஸ்பீடாக களம் இறங்கி உள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பணிகள் வேகம் எடுத்துள்ளன. ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்க இருக்கிறது. நாட்கள் வெகு குறைவுதான் என்பதால், தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் மும்முரப்படுத்தி உள்ளன.

அந்த வகையில், அதிமுக தமது தேர்தல் பணிகளை மற்ற கட்சிகளை காட்டிலும் வேகப்படுத்தி வருகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் ஆரம்பத்திலேயே 3 கட்டங்களாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நேற்றைய தினம், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை அறிவித்தார்.
அன்றைய தினம் மாலையே முழுமையான தேர்தல் அறிக்கையான இலவச பிரிட்ஜ், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை, மகளிருக்கு மாதம் ரூ.2000, கல்விக்கடன் தள்ளுபடி என கிட்டத்தட்ட 297 அறிவிப்புகளை வெளியிட்டார். அதே வேகத்தில் இன்று கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை வெளியிட்டார். அதிமுகவின் 23 தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்தார்.
தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் பட்டியல், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள், இதற்கு இடையே தமது தேர்தல் பிரசார திட்டம் என படு ஸ்பீடாய் சென்று கொண்டிருக்கும் இபிஎஸ், இன்றைய தினம் மயிலாப்பூரில் தேர்தலுக்கான தமது முதல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டார். பாஜ முக்கிய தலைவரான தமிழிசை சவுந்தர்ராஜனுடன் இணைந்து அவர், ஓட்டுகளை சேகரித்தார்.
ஆளும் கட்சியான திமுக இன்னமும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை அடையாளம் காணாமல் உள்ளது. தொகுதி பங்கீடுகளை முடித்து விட்டாலும், தொகுதிகள் ஒதுக்குவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, பிரசாரத்திட்டம் வெளியீடு என திமுகவும், அதன் கூட்டணியும் பின்தங்கியே உள்ளது.

Advertisement

மார் 26, 2026 12:05 am

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் 297 தேர்தல் வாக்குறுதிகள் என்பது சுதந்திர இந்தியாவில் தன்னிச்சையாக ஒரு அரசியல் கட்சி மக்களுக்கு முதல் முறையாக ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திருக்கும் அரசின் சார்பில் தரப்பட இருக்கும் வாழ்தார உத்திரவாத பிரமாண பத்திரம். ஏறக்குறைய ஒரு குடும்ப தலைவரோ தலைவியோ அன்றாடவீட்டு நிர்வாகத்திற்காக ஐந்தாண்டுகள் ஒரு பைசா கூட செலவழிக்க தேவையே இல்லாத ஒரு திட்டம். மாத ஊதியம் முழுவதும் சேமிப்பு கணக்கில் சேரும் வேளையில் அரசின் கடன் ஏறிக்கொண்டே போக கூடிய ஆபத்தான மாஸ்டர் பிளான். கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என முடிவெடுத்த பிறகு சாத்தியப்படாத வைகளை வாக்குறுதிகளை தனியாக அறிவிப்பது எப்படி நியாயம்? கட்சி சார்பில் அணைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மாநில அரசாங்கத்தால் தர கூடியவைகளை மட்டுமே வாக்குறுதிகளாக தர வேண்டும். இவை அணைத்தையும் மாநில வருவாயில் இருந்தே கொடுக்க வேண்டும். ஆனால் இவைகளை நிறைவேற்ற
மத்திய அரசிடம் நிதி கேட்கபடும் என எடப்பாடியார் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இவ்வாறு அ.தி.மு. க. கூறி ஓட்டு கேட்டால் பிறகு ஒவ்வொரு மாநில கட்சிகளும் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பஸ் கொடுக்கிறோம் என்றோ இரண்டு ஏக்கர் நிலம் தருகிறோம் என்றோ மக்கள் கற்பனை கூட செய்ய முடியாதவற்றை தருகிறோம் என அறிவிக்க தயங்க மாட்டார்கள். இதனால் நாடு மிக கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டு விடும். மத்திய நிதி அமைச்சர் இந்த வாக்குறுதிகளைபற்ற மத்திய அரசின் நிலையை விளக்க வேண்டும்.

Reply Rate this
மார் 25, 2026 10:35 pm

அண்ணா திமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணிக்கு வாழ்த்துக்கள் தமிழக மக்களின் பேராதரவுடன் வெற்றி நிச்சயம்

Reply Rate this
மார் 25, 2026 09:44 pm

அரசியல் களத்திலிருந்தும் முதலாவதாகத் தூக்கி எறியப்படப் போவதும் இவரே தான்... பதினொரு தோல்வி பழனிச்சாமி என்கிற பட்டப் பெயருடன்... கவலை வேண்டாம்...

Reply Rate this
மார் 25, 2026 09:34 pm

தமிழகத்தை ....... அடிக்க வேண்டும் அல்லவா

Reply Rate this