வால்பாறையை குறி வைக்கும் இ.கம்யூ.,
கோவை: ''இ.கம்யூ.,வுக்கு வால்பாறை சட்டசபை தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது'' எனகிறார் இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சிவசாமி.
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள இ.கம்யூ., கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதி என, இன்னும் முடிவாகாத நிலையில், இ.கம்யூ., சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகள் உட்பட 10 தொகுதிகளில் பட்டியலை தி.மு.க.,விடம் கொடுத்துள்ளனர்.
இதில் கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை தொகுதியில் அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதால், அந்த தொகுதியை பெறுவதில் கட்சி தலைமை அதிக முனைப்புடன் உள்ளது.
இ.கம்யூ., கோவை மாவட்ட செயலாளர் சிவசாமி கூறுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை இ.கம்யூ.,க்கு ஐந்து தொகுதிகள் முடிவாகி உள்ளன. வால்பாறை தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, தி.மு.க.,விடம் கட்சி தலைமை வலியுறுத்தி வருகிறது. வால்பாறை தொகுதியை பொறுத்தவரை இ.கம்யூ., சார்பில் போட்டியிட்ட, கருப்பையா, ஆறுமுகம் ஆகியோர் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளனர். இன்றைக்கு உள்ள அரசியல் சூழ்நிலையில் நாங்கள் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டால் உறுதியாக வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்