விபரம் கேட்காத தி.மு.க., நேர்காணல்: விருப்ப மனு அளித்தவர்கள் விரக்தி
மதுரை: ''சீட்' கேட்டு வந்தீங்க அறிவாலயத்தில் 'சீட்' கொடுத்தாச்சு; வேட்பாளர் அறிவிப்போம். தொகுதிக்கு சென்று வெற்றி பெற கட்சி வேலையை பாருங்கள்' என தி.மு.க., வேட்பாளர் நேர்காணலில் விருப்ப மனு அளித்த நிர்வாகிகளிடம் எந்த விபரமும் கேட்காமல் சில நிமிடங்களில் அனுப்பி வைப்பது நேர்காணலின் நம்பிக்கை தன்மையை கேள்விக்குறியாக்குகிறது என நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
தி.மு.க.,வில் விருப்பமனு அளித்தவர்கள் கூறியதாவது: விருப்ப மனுவின்போது கட்சி நிதிக்காக ரூ.25 ஆயிரம் கட்டணம் அளிக்கிறோம். தனித்தொகுதி, மகளிர் வேட்பாளருக்கு கட்டணம் ரூ.15 ஆயிரம். இந்த நேர்காணலில் 15,372 பேர் மனு அளித்தனர். ரூ.20 கோடிக்கு மேல் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
கருணாநிதி காலத்தில் இதுபோன்று விருப்ப மனு அளித்தோரை நேர்காணலுக்கு தனித்தனியே அழைத்து, கட்சியில் சேர்ந்த ஆண்டு, வகித்த, தற்போது வகிக்கும் பதவி, பொருளாதார நிலை,தொகுதியில் ஜாதி பின்னணி, கட்சிக்காக போராட்டத்தில் பங்கேற்று ஜெயிலுக்கு சென்றது உட்பட பல விஷயங்களை கேட்டு வேட்பாளரை மதிப்பீடு செய்வார்.
ஆனால் தற்போது ஒரு தொகுதிக்காக மனு அளித்த 20, 30 பேரை மொத்தமாக அழைத்து 'வேட்பாளரை நான் அறிவிப்பேன் தொகுதிக்கு சென்று ஒற்றுமையாக வேலையை பாருங்கள்' என கூறி சில நிமிடத்தில் அனுப்பி வைக்கின்றனர். தனித்தனியாக நிர்வாகியை சந்தித்து தலைவர் ஸ்டாலின் உரையாடும் வகையில் நேர்காணலில் மீண்டும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றனர்.
Advertisement

சும்மா கண் துடைப்புக்காக தான் நடத்துறோம்