Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


திமுக ஆட்சி வெங்காயம் போல... உரித்தால் ஒன்றும் இருக்காது: இபிஎஸ்

திமுக ஆட்சி வெங்காயம் போல... உரித்தால் ஒன்றும் இருக்காது: இபிஎஸ்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: வெங்காயம் உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது, கண்ணீர் வரும். அது போல, திமுக ஆட்சியை போலி விளம்பரங்களுக்கு அப்பால் உரித்துப் பார்த்தால், உள்ளே ஒன்றும் இருக்காது என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
இன்றைய தினம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் நேர்ந்த மக்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தி சென்று, கூட்டணி வெற்றி வேட்பாளர்களுக்கு பிரசாரம் மேற்கொண்டேன். வெங்காயம் உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது. ஆனால் இருப்பவருக்கு கண்ணீர் வரும்.
அதுபோல, திமுக ஆட்சியை போலி விளம்பரங்களுக்கு அப்பால் உரித்துப் பார்த்தால், உள்ளே ஒன்றும் இருக்காது. மக்களின் கண்ணீரும், வேதனையும் மட்டுமே மிஞ்சும். இப்படிப்பட்ட மோசமான ஆட்சி வீழ்வதற்கான நேரம் வந்துவிட்டது.
தனது ஆட்சிக்காலம் முழுவதும் அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியவர், இன்றுஅதிமுக தேர்தல்அறிக்கை-யை காப்பி பேஸ்ட் செய்து திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளார். மக்களுக்கு தேவை இவர்களின் ஸ்டிக்கர் ஆட்சியா? இல்லை, நமது ஒரிஜினல் ஆட்சியா?மக்களே, தேர்தல் நாளை மறந்துவிடாதீர்கள்.
இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.

Advertisement

மார் 30, 2026 12:09 pm

இபிஎஸ் க்கு வெங்காயத்தை பார்த்து பயம்!

Reply Rate this
மார் 30, 2026 12:07 pm

எல்லோர் வீட்டிலும் சமையலுக்கு ஆகும் அந்த வெங்காயம்!

Reply Rate this
மார் 30, 2026 10:34 am

வெங்காயத்தின் ஒவ்வொரு லேயரும் ருசியோ ருசி. வெங்காயத்தை குறை சொல்லாதீங்க.

Reply Rate this
மார் 29, 2026 11:36 pm

எடப்பாடி அண்ணே இந்த வசனத்தை முதலில் பேசியது அண்ணாமலை அவர்கள்.

Reply Rate this
மார் 29, 2026 11:25 pm

உங்கள் கண்ணில் மட்டும் கண்ணீர் வருவது தெரிகிறது

Reply Rate this
மார் 29, 2026 11:03 pm

உங்கள் ஆட்சியில் அது கூட இல்லை

Reply Rate this

உண்மை தான்..வெற்று விளம்பரம் மற்றும் தற்பெருமை.. இதைத்தான் 5 வருடங்கள் விடியல் செய்துள்ளார்
.

Reply Rate this