தேர்தலில் போட்டியிட விடாமல் பிரேமலதா தடுத்தாரா?
தி.மு.க.,வில் இணைந்த தே.மு.தி.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால், கடைசி நேரத்தில், மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது. இதனால் கடும் கோபம் அடைந்த தி.மு.க., தலைமை, அப்போது தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களாக இருந்த சந்திரகுமார், சி.எச்.சேகர், பார்த்திபன் ஆகியோரை தன் பக்கம் இழுத்தது.
அந்தத் தேர்தலில், அவர்கள் மூவருக்கும் தி.மு.க., வாய்ப்பளித்தது. 2019 லோக்சபா தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்டு, பார்த்திபன் எம்.பி.,யானார். கடந்த 2025 பிப்ரவரியில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட சந்திரகுமார் எம்.எல்.ஏ., ஆனார்.
இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட, இந்த மூவரும் விருப்ப மனு அளித்திருந்தனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என, தி.மு.க., தலைமை உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், நேற்று முன்தினம் வெளியான தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், அவர்களது பெயர் இல்லை. தி.மு.க., கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அழுத்தத்தின் பேரிலேயே, தி.மு.க., தலைமை அவர்களுக்கு சீட் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
Advertisement
Will Capt. Vijaykanths soul accept this unnacep alliance itself in the first place? If not, why his fans and his partys loyal workers should accept it?
தே.மு.தி.முவும், தி.மு.கவும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க. இதில் தே.மு.தி.கவில் இருந்து தி.மு.கவிற்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏக்களை விட அதிகம் பாதிக்கப் பட்டவர் நடிகர்.வடிவேலு. தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை நடிப்பின் உச்சத்தில் உச்ச மார்க்கெட்டில் இருந்த போது அன்றைய விஜய்காந்த், வடிவேலு சண்டையை தனக்கு சாதகமாக பயன் படுத்தி வடிவேலுவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது தி.மு.க. அன்று 2011 முதல் இன்று வரை போதிய பட வாய்ப்பின்றி வீட்டிலேயே முடங்கி உள்ளார் வடிவேலு. தனிப்பட்ட முறையில் வடிவேலு எப்படியோ? ஆனால் அவரது நகைச்சவை நடிப்பிற்கு மொத்த தமிழ் நாடும் அடிமை. அதையும் கெடுத்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை பஞ்சத்தை ஏற்படுத்தியது தி.மு.க. இன்றைக்கு உள்ள மற்ற தமிழ் நகைச்சுவை நடிகர்கள் காமெடி என்ற பெயரில் சும்மா கிச்சு, கிச்சு மூட்டிக் கொண்டு உள்ளார்கள். ஒரு விதத்தில் விஜய் தி.மு.க வை தீய சக்தி எனக் குறிப்பிடுவது சரியான வார்த்தைதான்.
Dummy Pieces With Inflated Importances People Already Rejected these Suitcase Party Opportunists
நாயுடு இனம் மற்றும் தெலுங்கு பேசுவோருக்கு மட்டும் முன்னுரிமை..நாயுடு முன்னேற்றக் கழகம் அப்டின்னு பேர் வைக்கலாமே? இந்தம்மா காசுக்கு விலை போகலாம்.அவங்க போகக் கூடாதா?
தவறு செய்தால் தண்டனை நிச்சயமாக கிடைக்கும் அது இந்த சம்பவத்தில் தெரிகிறது
திமுக கூட்டணியில தேமுதிக சேர்ந்ததே ஓடிப்போன ஓடுகாலிகளான உங்களை பின்னிப் பெடலெடுக்கத்தான் என்று இவிங்களுக்கு இப்ப புரிஞ்சிருக்கும்.

நாய் ஒழிப்புக்கு வாக்குறுதி தருவார்களா? தெருநாய் பிரச்சனை மோசமா இருக்கு.