Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


இன்று பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இன்று பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியீடு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், இன்று சென்னையில் பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுகிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில், 27 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று பேர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு, கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளருமான பீயூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார். அவர் தலைமையில், மத்திய தேர்தல் குழு கூட்டம் நடக்கிறது.

இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.

இக்கூட்டத்திற்கு பின், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள பா.ஜ., வேட்பாளர்களின் பட்டியலை, பீயூஷ் கோயல் வெளியிட உள்ளார். மேலும், தமிழக சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையும் வெளியாக உள்ளது.

Advertisement

மார் 31, 2026 07:56 am

அதிமுக வை சும்மா விட்டாலே ஜெயிக்கும்

Reply Rate this
மார் 31, 2026 07:27 am

பாஜகவும் காங்கிரஸும் ஒன்றே கோஷ்டி சூழலில்.

Reply Rate this
மார் 31, 2026 07:02 am

1. வெற்றி வெற்றி வெற்றி... 2. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டுபா... 3. இது தான் மக்கள் படை... இந்த தேர்தல் வாக்குறுதி அடுத்த நூறாண்டுக்கானது... 4. அடுத்த முதல்வர் எடுப்ஸ்... இல்லையில்லை ஸார் தான் ம்மே ம்மே.... 5. ஆங்...முக்கியமா...டீம்கா ஒயிக.... மேலேயிருக்கும் டெம்ப்ளேட்களை கண்ணு வேர்த்தாலும் யூஸ் பண்ணிக்கோங்க ... மேலும். இருநூற்றையும் நீங்களே வச்சிட்டு வாழவும்

Reply Rate this
மார் 31, 2026 06:34 am

தமிழகத்தில் அரசியல் செய்ய உங்களுக்கு அருகதை இல்லை.

Reply Rate this
மார் 31, 2026 06:21 am

அண்ணன் என்ன செய்தாலும் இங்கு சிரமம் தான்

Reply Rate this
மார் 31, 2026 06:16 am

நோ அண்ணாமலை நோ வோட்

Reply Rate this