12 ஆண்டுகளுக்கு பின் பா.ம.க., - திருமா நேரடி மோதல்
வி.சி.க.,வை துவங்கிய திருமாவளவன், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதை கொள்கையாக கொண்டிருந்தார். ஆனாலும், 1999 லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில், த.மா.கா., கூட்டணியில் போட்டியிட்டு, 2 லட்சத்து 25,768 ஓட்டுகள் பெற்றார்.
பின், 1999, 2004, 2009, 2014 என, நான்கு தேர்தல்களில் அவருக்கும், பா.ம.க.,வுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டது. திருமாவளவனுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது, இரு சமுதாய மோதலாக மாறும் சூழல் ஏற்பட்டது. அதனால், 2009, 2014ல் அவருக்கு எதிராக போட்டியிடுவதை, பா.ம.க., தவிர்த்தது.
இந்நிலையில், காட்டுமன்னார் கோவில் தனி தொகுதி, அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கும், தி.மு.க., கூட்டணியில் வி.சி.க.,விற்கும் ஒதுக்கப்பட்டது. சிதம்பரம் லோக்சபா தொகுதி எம்.பி.,யான திருமாவளவன், யாரும் எதிர்பாராத வகையில், காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட ப் போவதாக அறிவித்துள்ளார்.
பா.ம.க., சார்பில், அக்கட்சியின் மருத்துவர் அணிச் செயலர் அன்பு சோழன் களமிறக்கப்பட்டுள்ளார். 12 ஆண்டுகளுக்கு பின், தேர்தல் களத்தில் பா.ம.க.,வுக்கும், திருமாவளவனுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
Advertisement
திருமா நல்லவர் என்று சிலர் கருத்து போடுகிறார்கள். சமுதாயத்திற்கு சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளை பட்டியலிட்டாலும் பரவாயில்லை. ஒப்புக்கொள்ளலாம்.
திருட்டு உருட்டு மிரட்டு என்று அலையும் ஒருத்தன் அங்கே வெற்றி பெறத்தான் பலரும் வேலை செய்வர், ஏன் எங்கள் ஜாதியான வன்னியர்கள் பலரும் மதம் மாறியுள்ள நிலையில் உள்ளது ...

ஹிந்து விரோதிகள் தோற்கடிக்கப்படவேண்டியது காலத்தின் அவசியம். இல்லாவிட்டால் சமூக ஒற்றுமை பாதிக்கப்படும்.