அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,: 'நோ என்ட்ரி'யால் அதிர்ச்சி
- நமது நிருபர் -
அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வுக்கு வர விருப்பப்படுவோரை, கட்சியில் சேர்ப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது.
தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க.,வில், 78 மாவட்டச்செயலர்கள், 25 சார்பு அணிகள், 126 எம்.எல்.ஏ.,க்கள், 22 எம்.பி.,க்கள், 11 ராஜ்யசபா எம்.பி.,க்கள் உள்ளனர். இதில், அ.தி.மு.க.,வில் இருந்து வந்த, 11 பேர் மாவட்டச்செயலர்களாக உள்ளனர். தவிர, பலர் அமைச்சர்களாக இருப்பதோடு, எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்களாகவும் சார்பு அணி உள்ளிட்ட பதவிகளிலும் உள்ளனர்.
சமீபத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், நிலோபர் கபில், முன்னாள் எம்.பி.,க்கள் அன்வர் ராஜா, மைத்ரேயன், முன்னாள் எம்.எல். ஏ., மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பலரும் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் சீட் கிடைக்காதோர், மீண்டும் கட்சியில் இணைய முடியாதவர்கள் பலரும் தி.மு.க.,வில் இணைய காத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் தி.மு.க., தலைமைக்கு அப்ளிகேஷன் போட்டு காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு தி.மு.க., தலைமை திடீர் தடை போட்டுள்ளது.
'அ.தி.மு.க.,வை பலம் இழக்க செய்வதன் வாயிலாக, தமிழகத்தில் பா.ஜ., வலுவடைந்து விடும்' என்ற கருத்து, தி.மு.க., மேலிடத்துக்கு சென்றுள்ளது. இதையடுத்தே, அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு வர நினைப்போருக்கு 'நோ என்ட்ரி' போடப்பட்டுள்ளது. இதை மாவட்டச்செயலர்கள் கூட்டம் வாயிலாக கட்சித் தலைமை சொல்லி உள்ளது. இதனால், விண்ணப்பம் போட்டு காத்திருக்கும் அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement
அடுத்த கட்சியிலிருந்து வருபவரை அரவணைப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு முக்கிய பதவியும் கொடுத்து அவர்களை தேர்தலில் போட்டியிட செய்வதென்பது ஏற்கத்தக்கதல்ல.அப்படி செய்வது ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து கட்சிக்காக நேர்மையோடு வேலை செய்து கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுபவரை அவமதிப்பதாகும்.மனிதர்களிடம் இருக்கும் உண்மைத்தன்மையை குலைக்கும் இது போன்ற செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு வருபவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அரவணைக்காமல் திருப்பி அனுப்பபட வேண்டும்
ஒருவருக்கொருவர் மலை முழுங்கிகளாக உள்ளனர் அதிமுக கூட்டணியினர் ஒற்றுமையாக உணர்வு பூர்வமாக செயல் பட்டால் கண்டிப்பாக ஆட்சியை பிடிக்க முடியும் செயல் பிரசாரத்தை வழிபடுத்தும் விதமாக சிறப்பு பேச்சாளர்கள் ஒருமுறை வலம் வரசெய்யலாம்.
எல்லாம் அன்னான் தன்தம்பி திருட்டு கும்பலுக்குல் ஒரு அண்டர் ஸ்டான்ங்டிங்தாம் பா?
சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று திமுக கூறும். நடைமுறையில் எதுவும் செய்யாது. ஹிந்து கடவுள்களை கேலி கிண்டல் செய்யும். ஆனால் உண்மையில் அவர்கள் தான் திமுகவில் முக்கியமான பதவியில் இருப்பார்கள். சிந்தித்து ஓட்டு போடும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஹிந்துக்களே. அதனால்தான் திமுக ஜெயிக்கிறது.
எது எப்படியோ...பி.ஜே.பி நயவஞ்சகம் தமிழகம் உள்ள வராம இருந்த சரி.
சூப்பர் ஸ்டோரி. அதுபோக ஸ்டாலின் மற்றும் அவரது குடுபத்தினருக்கும் யுகாதி வாழ்த்துக்கள்
சரி சரி. ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போடாம, அறிவாலய வாசல்ல வரிசையா நில்லுங்க. போஸ்டரும், பசை வாளியும் எல்லாருக்கும் தருவாங்க. மறக்காம, எல்லா சுவத்துலயும் தி.மு.க. அடுத்த அடுத்த வாரிசுகள் பற்றிய போஸ்டரை நல்லா ஒட்டுங்க அப்போதான், சாயங்காலம் பிரியாணியும், உற்சாக பானமும், கைச்செலவுக்கு பணமும் கிடைக்கும். அப்பறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன். போஸ்டர் ஒட்டுறப்ப, அப்போ அப்போ டீ தருவாங்க. மறக்காம கேட்டு குடிங்க. முருகனான துறையார் அவரே இதைப்பற்றி சொல்லி இருக்கார். தி.மு.க. தொண்டன் வெறும் டீ குடித்துவிட்டு போஸ்டர் ஓட்டுவான்னு. உங்க பவிஷு அவ்ளோதான். ஒரு ஜான் வயிற்றுக்கு கஷ்டப்படுபவனுக்கு இது தொழில். தவறில்லை. ஆனால், வசதி, வாய்ப்பு உள்ளவங்க, முன்னாள் MLA / MP / அமைச்சர்களுக்கு இது தேவை தானா?? என்ன பண்றது, எல்லாம் அவங்க அவங்களே தேடிகிட்டது. ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்குமா ?? அதுல பாருங்க, வேதாளத்துக்கு வாழ்க்கைப்பட்டால், முருங்கைமரம் ஏறித்தான் ஆகணும். என்ன நான் சொல்றது ?
பிஜேபி உடன் கூட்டணி வைத்திருந்த சமயம், ஆட்சியில் அமைச்சர்கள் பதவிக்கு திமுகவினர் தேர்ந்தெடுக்கப் பட்டபோது, மதவாத கட்சியாக தெரியாத பிஜேபி இன்று எதிரிக் கட்சியாக தெரிகிறது. காரணம், சிறுபான்மை என்று சொல்லி அரசின் நிறைய சலுகைகள் தாராளமாக அனுபவித்து கொண்டு, இன்று பெரும்பான்மையாக மாறிக் கொண்டிருப்பவர்கள் கவனிப்பு கூடுதலாக உள்ளதாக ஊரில் எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள்.

அரசியல் இல்லை இவர்களிடம். அரசியல் பேரமும் பணம் ஆசையும் தான் உள்ளது. கேடு கெட்ட அரசியல். இந்த திமுக அதிமுக இரண்டையும் இணைத்து பொ.தி.மு.க பொதுவான திமுக என பெயர் வைத்து விடலாம்