/ செய்திகள் / இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!

சென்னை: தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு, தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடி.தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை ஒட்டி வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை, தலைமை தேர்தல் கமிஷன் 2025ல் துவக்கியது. இதற்காக, நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்தது. இதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, 2025 அக்டோபர் மாத நிலவரப்படி, 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களில், 97.30 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தற்போது, 5.43 கோடி பேர் மட்டுமே பட்டியலில் உள்ளனர். இதை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யவும், கடந்த 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெயர் சேர்க்க 22.8 லட்சம் மனுக்கள்; பெயர் நீக்க 2 லட்சம்; திருத்தம் செய்ய 9.90 லட்சம் மனுக்கள் என, மொத்தம் 34.7 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.இறுதி வாக்காளர் பட்டியல்அவற்றை பரிசீலித்து, இறுதி வாக்காளர் பட்டியலை, தலைமை தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டது. மாநிலம் முழுதும் உள்ள இறுதி வாக்காளர் விபரங்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.* தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடி.* ஆண் வாக்காளர்கள் 2,66,63,233, * பெண் வாக்காளர்கள் - 2,77,06,332 3ம் பாலினத்தவர் -761797 லட்சம் பேர் நீக்கம்எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டு இருந்தனர். தற்போது எஸ்ஐஆர் இறுதி நடைமுறைக்குப் பிறகு கூடுதலாக 23.30 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 11.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கலெக்டர்கள், இன்று பட்டியலை வெளியிட்டனர். அதன் விபரம் பின்வருமாறு:* நாமக்கல் மாவட்டத்தில், 6 சட்டசபை தொகுதிகளில், ஆண் வாக்காளர்கள், 6,35,299, பெண் வாக்காளர்கள், 6,75,452, இதரர், 200, மொத்தம்: 13,10,951. நீக்கம் செய்யப்பட்டவர்கள், 1,43,321 பேர்.* தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் இளம் பகவத் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.* விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 14,97,417 வாக்காளர்கள் உள்ளனர்* சிவகங்கையில் ஆண் வாக்காளர்கள் -5,44,035, பெண் வாக்காளர்கள்- 5,66,526, மூன்றாம் பாலினத்தவர்கள்-38, மொத்த வாக்காளர்கள்-11,10,599.* சேலத்தில் ஆண் வாக்காளர்கள் - 13,70,962, பெண் வாக்காளர்கள்- 13,84,548, மூன்றாம் பாலினத்தவர்கள்-320, மொத்த வாக்காளர்கள்-27,55,830.* திருச்சியில் ஆண் வாக்காளர்கள் - 10,31,354, பெண் வாக்காளர்கள்- 10,94,642, மூன்றாம் பாலினத்தவர்கள்-307, மொத்த வாக்காளர்கள்-21,26,303.* கடலூரில் ஆண் வாக்காளர்கள் - 9,91,527, பெண் வாக்காளர்கள்- 10,23,979, மூன்றாம் பாலினத்தவர்கள்-293, மொத்த வாக்காளர்கள்-20,15,196.* செங்கல்பட்டில் ஆண் வாக்காளர்கள் - 11,04,511, பெண் வாக்காளர்கள்- 11,55,144, மூன்றாம் பாலினத்தவர்கள்-381, மொத்த வாக்காளர்கள்- 22,60,036.* கன்னியாகுமரியில் ஆண் வாக்காளர்கள் - 7,51,016, பெண் வாக்காளர்கள்- 7,59,390, மூன்றாம் பாலினத்தவர்கள்-144, மொத்த வாக்காளர்கள்- 15,10,550.* மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 7,29, 216, இதில் ஆண் வாக்காளர்கள் 3,60,493, பெண் வாக்காளர்கள் 3,68,676, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 47 பேர் இடம் பெற்றுள்ளனர். * கோவையில் ஆண் வாக்காளர்கள் - 13,00,889, பெண் வாக்காளர்கள்- 13,95,396, மூன்றாம் பாலினத்தவர்கள்-528, மொத்த வாக்காளர்கள்- 26,96,813.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Venkitaswsmy Rangaswamy
பிப் 23, 2026 16:02

மக்கள் தங்கள் பெயர்களை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்டவரை அணுக வேண்டும்.


கரீம் பாய், ஆம்பூர்
பிப் 23, 2026 15:32

நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர் கள் மிகவும் குறைவு. இன்னமும் 2 கோடி வாக்காளர் நீக்கம் செய்யப்படவேண்டும்...திருப்பூர், மற்றும் coimbatore ரில் நிறைய அண்டை நாடான வங்க தேசத்தினர் ஊடுருவல்


ரஹ்மத் கீழக்கரை
பிப் 23, 2026 15:29

இதில் எத்தனை வாக்காளர் கள்ள குடியேறி, வங்க தேசத் திருட்டு குடியேறிகள் ? தேர்தல் நேரம். ஆளும் கட்சியின் ஆசிகள் அவர்களுக்கு நிரம்ப உண்டு


ஆரூர் ரங்
பிப் 23, 2026 15:09

சுமார் ஒரு கோடி பேர் நீக்கம். திராவிஷ மாடலில் மக்கள் தொகை உயர்ந்து வாக்காளர்களின் எண்ணிக்கை குறைகிறது? . மற்ற மாநிலங்களைப் போல் இங்கு SIR மூலம் யாரையும் நீக்க முடியாது என்ற ஸ்டாலினின் உருட்டு வெளுத்துவிட்டது.


prakash
பிப் 23, 2026 15:05

DMK voters நீக்கி விட வேண்டும்.


ஆகுயர்தான்
பிப் 23, 2026 16:03

அய்யோ அப்போ எங்க இருநூறுக்கு நாங்க எங்கே போவது?


Balasubramanian
பிப் 23, 2026 13:28

சராசரியாக தொகுதிக்கு 2,34,,000 இரண்டு லட்சத்து முப்பத்து நான்காயிரம் வாக்காளர்கள்! ! கட்சிகள் ரூ 40 கோடி வரை செலவிட திட்டம்! தேர்தல் திருவிழா! திருட்டு போவது மக்கள் சுயமாக சிந்தித்து ஓட்டு போடும் உரிமை! எல்லா உரிமையும் சில ஆயிரம் ரூபாயில் அடக்கம்!