/ செய்திகள் / தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்து காங்கிரசுக்கு தி.மு.க., செக்

தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்து காங்கிரசுக்கு தி.மு.க., செக்

'ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிக தொகுதிகள் வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. 'ஆட்சியில் பங்கு இல்லை' என்பதை, ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அறிவித்து விட்டார். தொகுதி பங்கீட்டில், காங்கிரசுக்கு 25 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க, தி.மு.க., விரும்பவில்லை. இப்போது, தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்து, காங்கிரஸ் கட்சிக்கு 'செக்' வைத்து விட்டது, ஆளும் தலைமை. இனி காங்கிரசால் பேரம் பேச முடியாத நிலைமையை, தி.மு.க., ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. கூட்டணி மலர்ந்தது எப்படி?கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலை, தே.மு.தி.க., முதல் முறையாக சந்தித்தது. விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். தனித்து போட்டியிட்டு, 8 சதவீத ஓட்டுகளை பெற்றது. கடந்த 2009 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தாலும், 10 சதவீத ஓட்டுகளை பெற்றது. பின், 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 எம்.எல்.ஏ.,க்களுடன், சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.கடந்த 2014 லோக்சபா தேர்தல், 2019 லோக்சபா தேர்தல், 2024 லோக்சபா தேர்தலில் தொடர்ந்து அக்கட்சி தோல்வியை சந்தித்து வந்தது. 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில்களிலும் தோல்வி அடைந்ததால், தற்போது 2 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டு வங்கியை தான் தக்க வைத்திருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில், கட்சிக்கு அங்கீகாரம் பெற்றாக வேண்டும்; முரசு சின்னத்தை காப்பாற்றியாக வேண்டும் என்பதால், கூட்டணி பேச்சில் அவசரம் காட்டாமல் இருந்து வந்தார் பிரேமலதா.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், அதன் தலைமையிலான கூட்டணியில் இணைய, அவர் விரும்பவில்லை. தன் கட்சியினரின் விருப்பத்தின் அடிப்படையில், முதல் முறையாக தி.மு.க., கூட்டணியில் இணைந்துள்ளார். தே.மு.தி.க.,வில் 50க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலர்கள், தி.மு.க., கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன்படி, தி.மு.க., மூத்த அமைச்சர் எ.வ.வேலு, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஆகியோருடன் பிரேமலதா பேச்சு நடத்தினார். அமைச்சர் எ.வ.வேலு வீட்டிற்கு மட்டும், ஆறு முறை தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் சென்றுள்ளார். தே.மு.தி.க.,வுக்கு ஆறு சட்டசபை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் வழங்குவது என பேசப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டதால், இரு கட்சிகள் இடையே கூட்டணி மலர்ந்துள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

amsi ramesh
பிப் 20, 2026 19:24

யோவ் தினமலர் நக்கல்யா உனக்கு


ஜெகதீசன்
பிப் 20, 2026 18:02

பிரேமலதா மற்றும் OPS ஆகியோரை சேர்த்து கொண்டு அவர்கள் சார்ந்த ஜாதி ஓட்டுகளை திமுக கணிசமாக அறுவடை செய்கிறது. எல்லாம் சமூக நீதி மண்ணாங்கட்டியில் அடக்கம்.


சிங்காரம்
பிப் 20, 2026 13:33

தினமலர் நாளிதழ் முதல்வரின் சரியான புகைப்படத்தை தேர்ந்தெடுத்து உள்ளது.


R SRINIVASAN
பிப் 20, 2026 12:36

காங்கிரஸ்-kku சூடு சொரணை இருக்குமானால் தவேகவுடன் கூட்டு சேர்ந்து 60 இடங்களில் வெற்றி பெறவேண்டும்


renga rajan
பிப் 20, 2026 09:56

எடப்பாடியார் சரியா செய்றார் பிரேமலதா mla சீட் முக்கியமில்லை ராஜ்ய சபா mp நோகாம. mp சீட் and election செலவுக்கு பணம் அவ்வளவுதான்


SIVA
பிப் 20, 2026 08:53

இந்த தேமுதீக என்ற செக் தரையில் போட்டாலே பௌன்ஸ ஆகும் அதை நம்பி வங்கியில் போட போகின்றார்கள் என்ன நடக்குது என்று பார்க்கலாம் ....