/ செய்திகள் / ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் விஜய பிரபாகரன்?

ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் விஜய பிரபாகரன்?

கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெற்றிருந்தது. விருதுநகர் தொகுதியில், தே.மு.தி.க., இளைஞரணி செயலர் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். வெற்றியின் விளிம்பை எட்டிய விஜய பிரபாகரன், குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில், கடைசி நேரத்தில் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.மாணிக்கம் தாகூர் வெற்றிக்காக உழைத்த தி.மு.க.,வுக்கு எதிராக, இப்போது அவர் செயல்பட்டு வருகிறார். எனவே, அவரை எதிர்த்து போட்டியிட்ட விஜய பிரபாகரனுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க, முதல்வர் ஸ்டாலின் முன்வந்துள்ளார். தொகுதி பங்கீட்டு பேச்சில் 10 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும், தே.மு.தி.க., தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு ஆறு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் வழங்க தி.மு.க., முன்வந்துள்ளதாக தெரிகிறது. விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
பிப் 20, 2026 10:50

போய் என்ன செய்வாரு? இந்தியாவுக்கு ராஜ்யசபாவே வேஸ்ட்.


Haja Kuthubdeen
பிப் 20, 2026 10:30

ராஜ்யசபா ஒன்னு திமுகவிற்கு வேஸ்ட்.விருப்பமனு வாங்கவே ஆளில்லாத கட்சி பெரிய விலைக்கு போயிருக்கு.எடப்பாடி ஏலத்தில் பங்கு பெற்று அண்ணாமலை பட ரஜினி போல ஏத்திவிட்டுட்டு திமுக தலையில் கட்டிவிட்டார்.இனி குடச்சல் திமுகவுக்குதான்.அஇஅதிமுக GREAT ESCAPE...


mindum vasantham
பிப் 20, 2026 08:39

நல்ல பய்யன் தான் வாழ்த்துக்கள்


jaga
பிப் 20, 2026 08:15

இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு


ramani
பிப் 20, 2026 06:45

இன்னொரு கமல்ஹாசன் உருவானான்


Raj
பிப் 20, 2026 06:16

ஒரு எம் பி பதவிக்காக இந்த தேய்ந்து முடிந்த திராவிட கழகம் தே. மு. தி. க மறைந்த விஜயகாந்தின் கொள்கையை தி மு க விடம் அடமானம் வைத்து விட்டது. கேவலம்.


Oviya Vijay
பிப் 20, 2026 05:59

ராஜ்யசபா தொகுதிகள் தரும் அளவிற்கு அக்கட்சி ஒன்றும் பெரியதல்ல... தேமுதிகவை வைத்து திமுக இனிமேல் வளர வேண்டிய அவசியமில்லை... திமுகவை வைத்து வேண்டுமானால் தேமுதிக என்னும் மிக மிகச் சிறிய கட்சி தங்கள் கட்சியை வளர்த்துக் கொள்ளலாம்...