/ செய்திகள் / அன்று துரோகிகள்; இன்று கூட்டணி கட்சியினர்: என்ன சொல்வார் பிரேமலதா!

அன்று துரோகிகள்; இன்று கூட்டணி கட்சியினர்: என்ன சொல்வார் பிரேமலதா!

-நமது நிருபர்-மக்கள் நலக்கூட்டணி தொடங்கியதை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கிய சந்திரகுமார் உள்ளிட்டோரை, பிரேமலதா இத்தனை ஆண்டுகளாக துரோகிகள் என்று விமர்சித்து வந்தார். இப்போது அவர்களே கூட்டணி கட்சியினராக மாறியுள்ள நிலையில், பிரேமலதா அவர்களை எப்படி எதிர்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த 2011 தேர்தலில் தேமுதிக சார்பில் 29 பேர் எம்.எல்.ஏ.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக கூட்டணியில் இவர்கள் வெற்றி பெற்றனர். விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.அது தான் தேமுதிக அடைந்த இமாலய வெற்றி. அதற்கு பிறகு அந்த கட்சிக்கு பெரும் வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.2016 தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, கடைசி நேரத்தில் முடிவை மாற்றி, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது.இதனால் அதிருப்தி அடைந்த அந்த கட்சியின் ஒரு பிரிவினரை, திமுக தனியாக உடைத்தது. அவர்கள் மக்கள் தேமுதிக என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தனர்.அவர்களில் முக்கியமானவர் சந்திரகுமார். அவரும், மேட்டூர் பார்த்திபனும், கும்மிடிப்பூண்டி சேகர் உள்ளிட்டோரும் இணைந்து கட்சி தொடங்கி, திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். பிறகு திமுகவில் இணைந்துவிட்டனர்.விஜயகாந்த் அவர்களை துரோகி என்று விமர்சித்தார். பிரேமலதாவும் சமீப காலம் வரை அவர்களை துரோகிகள் என்றே கூறி வருகிறார்.இப்போதும், சந்திரகுமார் எம்எல்.ஏ.,வாக இருக்கிறார். மேட்டூர் பார்த்திபன், 2019ல் எம்.பி.,யாக தேர்வானார். இப்போதும் திமுகவில் பொறுப்பில் இருக்கிறார்.கும்மிடிப்பூண்டி - சேகர், மயிலாடுதுறை -அருள்செல்வன், விருத்தாசலம் - முத்துக்குமார், சூலுார் - தினகரன் ஆகியோரும் இப்போதும் திமுகவில் தான் இருக்கின்றனர். இவர்களை எல்லாம் துரோகிகள் என்று வசைபாடிய பிரேமலதா, அவர்களை கூட்டணி கட்சியினராக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.9 பேர் மட்டுமே மிச்சம் தேமுதிக சார்பில் வெற்றி பெற்ற 29 எம்எல்ஏக்களில் விஜயகாந்த் உயிருடன் இல்லை. 19 பேர் வெவ்வேறு கட்சிகளில் இருக்கின்றனர். கீழ்க்கண்ட 9 பேர் மட்டும் தேமுதிகவில் இன்னும் நீடிக்கின்றனர். விருகம்பாக்கம் பார்த்தசாரதி திருக்கோவிலுார் வெங்கடேசன் செங்கல்பட்டு முருகேசன் திருவெறும்பூர் செந்தில்குமார் சோளிங்கர் மனோகர் கெங்கவல்லி சுபா பண்ருட்டி சிவக்கொழுந்து சேலம் வடக்கு மோகன்ராஜ் எழும்பூர் நல்லதம்பிஅதிமுகவில் 7 பேர் இருக்கின்றனர். ராதாபுரம் மைக்கேல் ராயப்பன் விருதுநகர் பாண்டியராஜன் மதுரை மத்தி சுந்தரராஜன் ஆரணி பாபு முருகவேல் திட்டக்குடி தமிழழகன் சேந்தமங்கலம் சாந்தி செங்கம் சுரேஷ் பாஜ கட்சியில் இருவரும், அமமுகவில் இருவரும் இருக்கின்றனர். நடிகர் அருண் பாண்டியன் எந்த கட்சியிலும் இல்லை. ஆலந்துார் தொகுதியில் அப்போது வெற்றி பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன், இப்போது தனிக்கட்சி தொடங்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

அப்பாவி
பிப் 20, 2026 09:12

அது அன்னிக்கி... இது இன்னிக்கி...


sankaranarayanan
பிப் 19, 2026 22:40

இந்த அம்மா கொடுத்த பேட்டிக்குப்பிறகு வீடுதேடி பேட்டி வந்தாகிவிட்டது இனி என்ன ஜமாய் ராஜா ஜாமாய் அம்மா இனி வீர வேஷம் கொண்டு கொந்தளிப்பார் வீடுவீடாக செல்வார் தேர்தல் முடிந்ததும் எங்கே இந்த அம்மா என்று தேடவேண்டும் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த விஜயகாந்த் சொத்துக்களை அழிப்பதற்கே என்று அவதாரம் எடுத்த உத்தம பெண்மணி


Ramesh Sargam
பிப் 19, 2026 21:48

பலர் கூறுகிறார்கள், பழம் நழுவி பாலில் விழுந்தது என்று. இல்லை இல்லை இல்லவே இல்லை. திமுக எனும் பாழும் கிணற்றில் விழுந்தது என்பதுதான் சரி.


Samy Chinnathambi
பிப் 19, 2026 21:14

வெற்றிகரமாக அண்ணியார் தங்கள் குடும்பத்தை ஒரு நல்ல விலைக்கு விற்றுவிட்டார்..வாழ்த்துக்கள்..கேப்டனை மன உளைச்சலுக்கு ஆளாக்கி சீக்கிரம் சாகவிட்ட குடும்பத்துடன் மனது ஒப்ப இணைந்த தருணம்..அண்ணியாரின் டிமாண்டை நிறைவேற்ற கூடிய வகையில் கொள்ளை அடித்து வைத்துள்ள ஓங்கோல் குடும்பம் தான் இவர்களின் தேவையை நிறைவேற்ற முடியும். ஒரே மொழி , ஒரே ஜாதி , ஒரே ஊரு இனம் இனத்தோட சேர்ந்தது...தமிழர்கள் தமிழன் எடப்பாடியை ஜெயிக்க வைப்பார்களா இல்லை தெலுங்கர்களிடம் அடிமையாக இருக்க விரும்புவார்களா என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்..


Venkat esh
பிப் 19, 2026 21:05

மானங்கெட்ட பொழப்பு மானங்கெட்ட மாடல்.... சிறந்த கூட்டணி


தமிழ்வேள்
பிப் 19, 2026 20:47

ஆருயிர் அண்ணியும், அன்புக்குரிய கொழுந்தனார்களும் என்று உறவு புதுப்பிக்கப்படும்.... அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.... ஆனாலும் தற்போது ஐயோ பாவம் என்றால் அது விஜயகாந்த் மட்டுமே......


Prem Kumar
பிப் 19, 2026 20:45

மற்ற அரசியல் தலைவர்களை போலவே, தி.மு.க.வோடு கூட்டணி அமைந்தது தொண்டர்களின் விருப்பம் என வாய் கூசாமல் பொய்யை பிரேமலதா கூறி அவராகவே மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். இது தொண்டர்களின் விருப்பம் என்பது உண்மையானால் தி.மு.க. ஒதுக்கும் அணைத்து தொகுதிகளிலும் விஜய்காந்த் மற்றும் நீண்ட காலமாக கட்சியில் உறுப்பினர்- தொண்டர்களாக வாழ்க்கையை தியாகம் செய்து வருபவர் களுக்கு கொடுக்க முன்வர வேண்டும். குறிப்பாக பிரேமலதா மற்றும் அவரது மகன் இருவருக்குமே எந்த தொகுதியை ஒதுக்கி கொள்ள கூடாது. செய்வாரா?


Ramesh Sargam
பிப் 19, 2026 20:23

அன்று துரோகிகள். இன்று கூட்டணி நண்பர்கள். நாளை? மீண்டும் துரோகிகள் ஆகலாம். அரசியல்ல இதெல்லாம் சர்வசாதாரணம்.


varatharajan
பிப் 19, 2026 20:04

நண்பர்களே அப்படிப் பார்த்தால் வாஜ்பாய் அவர்கள் 13 நாட்கள் மற்றும் 13 மாதம் நிம்மதி இல்லாமல் தனது வாழ்க்கையை புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதாவால் கழித்தார் என்பதை அனைவரும் ஆயி அதிமுக பிஜேபி அன்பர்கள் மனதில் வைத்து மற்ற பதிவுகளை இடவேண்டும் சுயநலத்திற்கு இடமில்லை


Ramesh Sargam
பிப் 19, 2026 20:01

அரசியல் ஒரு சாக்கடை என்று இப்பொழுது புரிந்ததா? கணவன் விஜயகாந்த் அன்று இதே திமுகவை கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டார். இன்று கணவர் எதிர்த்த அதே திமுகவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார். அப்படி என்றால் மறைந்த கணவனுக்கு என்ன மரியாதை?