நல்லா போடுறாங்க சீன்
சென்னை: திருச்சி விமான நிலையத்தில், சீமான், திருமாவளவன், தமிழிசை, சிவா ஆகியோர் சந்தித்து கொண்டனர். அந்த புகைப்படத்தை, 'முறுவலிக்கும் முரண்கள்' என தலைப்பிட்டு, வி.சி., தலைவர் திருமாவளவன் பகிர்ந்துள்ளார். ஈ.வெ.ராமசாமியை விமர்சித்து, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். இதன் காரணமாக, வி.சி., தலைவர் திருமாவளவன், கடுமையாக சீமானை விமர்சித்து வருகிறார். நா.த.க.,விற்கு எதிராக, 'தமிழ் எழுச்சி' மாநாட்டை நடத்தப்போவதாக, திருமாவளவன் அறிவித்துள்ளார். இதனால் இரு கட்சி தொண்டர்கள் இடையே, சமூக வலைதளங்களில் கடும் மோதல் நடந்து வருகிறது. பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசையும், திருமாவளவன் செயல்பாடுகளை, கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில், சீமான், திருமாவளவன், தமிழிசை, தி.மு.க., - எம்.பி., சிவா ஆகியோர், நேற்று சந்தித்துக் கொண்டனர். நான்கு பேரையும் சிவா செல்பி எடுத்தார். அந்த புகைப்படத்தை, 'முறுவலிக்கும் முரண்கள்' என தலைப்பிட்டு, வி.சி., தலைவர் திருமாவளவன், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கருத்து வேறுபாடுடைய, நான்கு அரசியல் கட்சிகளின், முக்கிய தலைவர்கள் சந்தித்து கொண்டது, அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இப்ப... பாகிஸ்தான் அதிபரும், மோடிஜி...யும் ஒரே விமானத்தில் பயணம் செய்ய நேர்ந்தால்..... முறைச்சிகிட்டா இருப்பாங்க...? ரெண்டுபேரும் நலம் விசாரித்து கை குலுக்கி கொள்வார்கள்... இது மனித மாண்பு, பண்பு...?
மக்களை கோமாளிகளாக்குகிறார்கள். இவர்களையெல்லாம் நம்பி வோட்டு போடும் பொதுஜனம் தான் ஏமாளிகள்...
ஆங்கிலேர்கள் ஆட்சியில் நடந்த போராட்டங்கள் முதல் இன்று வரை நடக்கும் அரசியல் போராட்டங்கள் வரை எந்த தலைவர்களும் போராட்டத்தில் இறந்ததாக சரித்திரம் கிடையாது.. பாவம் இது புரியாமல் தலைவர்களின் பேச்சால் கவர்ந்து இழுக்கப்பட்ட விட்டில் பூச்சிகள் போல தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்து கொள்வதும் அடிபட்டு சாவது என்றும் தங்கள் குடும்பத்தை நட்றாற்றில் விட்டு விடுகிறார்கள். அதுவும் இந்த திருட்டு திராவிட ஓங்கோல் கோவால் புர கொள்ளை குடும்பத்தின் ரூவா இருநூறு பரம்பரை கொத்தடிமைகள் ஐந்தாம் தலை முறை தலைவனுக்கு வாழ்க கோசம் போடுவதிலும் போஸ்டர் ஓட்டுவதிலும் புளங்காகிதம் அடைகிறார்கள்...
அரசியல் வாதிகள் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்திக் கொண்டு திரை மறைவில்
மேலும் செய்திகள்
தி.மு.க., பக்கம் சாய்ந்த தே.மு.தி.க., நழுவவிட்ட பழனிசாமி; பா.ஜ., குமுறல்
பிப் 20, 2026 04:43 am