ஆதரவு வாக்காளர்கள் விவரம் அ.தி.மு.க.வினருக்கு அறிவுரை
திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வில், சட்டசபை தேர்தல் பணி குறித்த ஆலோசனை கூட்டம், தகவல் தொழில்நுட்ப அணி வாயிலாக நடந்து வருகிறது. திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள, வாக்காளர் விவரங்களை பதிவு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று, திருப்பூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரேம்குமார் தலைமை வகித்தார். பனியன் தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் லோகநாதன், பகுதி செயலாளர் தினேஷ், ஏ.டி.பி., மாவட்ட செயலாளர் கண்ணபிரான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் கார்த்தி, புதிய 'மொபைல்ஆப்' வாயிலாக, வாக்காளர் விவரம் பதிவு செய்வது குறித்து விளக்கினார். 'ஆதரவு வாக்காளர் விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். அ.தி.மு.க., செயல்பாடுகள், இனிவரும் காலங்களில் கம்ப்யூட்டர் மயமாகும்; அனைத்து விவரங்களும், ஆன்லைனில் பராமரிக்கப்படும். அதற்கான பணிகளை தகவல் தொழில்நுட்ப அணி செம்மையாக மேற்கொள்ள வேண்டும்' என்று அறிவுறுத்தப்பட்டது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
மனுவை பெட்டியில போட்டுட்டு கிளம்புங்க! தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சோர்வு
பிப் 16, 2026 06:13 am
அதிகாரி செய்த தவறுக்கு எனக்கு தண்டனை:பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் ஆதங்கம்
பிப் 16, 2026 02:43 am