சிறுபான்மையின மக்களுக்கு உழைக்க தி.மு.க., காத்துக்கொண்டு இருக்கிறது: துணை முதல்வர் உதயநிதி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: “சிறுபான்மையின மக்கள், எப்போதும் போல தி.மு.க.,வுக்கு துணையாக இருக்க வேண்டும்,” என, துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் நேற்று முன்தினம் நடந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி வெள்ளி விழா மாநாட்டில், உதயநிதி பேசியதாவது: தி.மு.க.,வுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள பந்தம், கருணாநிதி, காயிதே மில்லத் காலத்தில் இருந்து உருவானது. கருணாநிதி வழியில், முஸ்லிம்களை தனது உறவாக முதல்வர் ஸ்டாலின் கருதுகிறார்.குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று, என் அரசியல் வாழ்வில் முதன் முதலாக கைதானேன். சிறுபான்மையின மாணவர்கள் படிக்கக் கூடாது என்பதுதான் பா.ஜ., அரசின் எண்ணம். அதனால்தான், சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்தியுள்ளனர்.இந்த அநீதியை எதிர்த்த முதல்வர் ஸ்டாலின், முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் ஒரு லட்சம் சிறுபான்மையின மாணவர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, கடந்த லோக்சபா தேர்தலின்போது, 'எக்காலத்திலும், பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க மாட்டோம்' என்றார். இப்போது கூட்டணி வைத்துள்ளார். சிறுபான்மையினருக்காக உழைக்க, தி.மு.க.,வும் தி.மு.க., அரசும் காத்துக் கொண்டிருக்கிறது. எனவே, சிறுபான்மையின மக்கள் எப்போதும் போல தி.மு.க.,வுக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 38 )
ஓட்டு போட்ட மற்றும் ஓட்டு போட எண்ணியிருக்கும் இந்து என்கிற சொரணையே இல்லாதவர்களுக்கு, ஒரு சொல். மாண்புமிகு சொன்னது போல, சிறுபான்மையினருக்கு உழைக்க மட்டுமே காத்துக் கொண்டிருக்கிறது கட்சி . இந்துக்களுக்கு எள்ளளவும் உதவ மாட்டாது திருட்டு கட்சி என்று சொல்லாமல் சொல்லி விட்டார். புரிகிறதா அந்தக்கட்சி இந்துக்களே
கருணாநிதி தன்னுடைய மகன் பிற்காலத்தில் உலக தமிழர்கள் போற்றும் உன்னத தலைவனாகவும் பல மொழிகள் பேசும் வித்தகனாகவும் வலம் வருவார் என கணித்து தூய தமிழில் ஸ்டாலின் என பெயர் வைத்து தமிழர்களாகிய நம்மை தலை நிமிர செய்தார். (நல்லவேளை வள்ளுவன் என பெயர் வைக்கவில்லை அப்படி வைத்திருந்தால் முள்ளிவாய்க்கால் சம்பவத்தை விட மோசமான சம்பவம் திருக்குறளுக்கும் வள்ளுவருக்கும் நடந்திருக்கும்).
ஆம் திமுக சிறுபான்மை மக்களுக்கு எப்படி உழைக்க காத்துக் கொண்டிருக்கிறது என்று பார்ப்போம். அரசியல் என்பது கடுமையான பணிதான் அது எப்படி என்று மறைந்த கருணாநிதியின் வார்த்தைகளில் தெரிந்து கொள்வோம்: நாம் எழுதும் பேனா போர் வாளை விட வலிமையானது என்ற வாசகத்தை எழுதியதும் கருணாநிதிதான். அந்த போர் வாளை தனக்குள் மறைத்து வைத்திருந்து தன் அரசியல் எதிரிகள் பலரை காவு வாங்கியதும் அதே கருநாக கருணாநிதிதான். தன்னிடம் மட்டும் அந்த போர் வாளும் மற்றவர்களிடம் வெறும் பேனாவும் மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்பியவரும் அதே கருணாநிதிதான். இப்போது தெரிகிறதா அரசியல் என்பது எவ்வளவு கடுமையான பணி என்று!
பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா? கன்னியாஸ்திரிகள் என்ன கன்னியர்களா? என்று தன் திருவாயில் இருந்த முத்தை உதித்தவர்தான் முத்தமிழ் வித்தகர் கருணாநிதி என்பது எத்தனை கிறிஸ்தவ நண்பர்களுக்கு தெரியும்? இருந்தாலும் பாஜக தமிழகத்தில் கால் பதித்துவிடும் அதனால் நீங்க திமுகவிற்கே வாக்களிக்க வேண்டும்!
என்னவோ...
இதை சொல்லியே உங்களை இந்துக்களுக்கு ஆகாமல் செய்கிறார்கள்.
வாக்கு வங்கி என்ற சுயநலம் சார்ந்த அரசியல்தான் இதற்கு அடிப்படை காரணம் ஆகும்.
நீங்கள் உழைத்து உயர்ந்துகொண்டதுபோதும். இளைப்பாருங்கள். போதும். நாட்டுமக்களை முன்னேறவிடுங்கள்.
பெரும்பான்மையினரின் உழைப்பை உறிஞ்சி பெற்றுக்கொண்டு சிறுபான்மையினருக்கு சலுகைகள். மகா கேவலம். சிந்தியுங்கள் மக்களே.
எந்த பிரத்யேக சலுகையும் இல்லை...உழைத்தால்தான் சோறு...
பெரும்பான்மையினர் கவனிக்க வேண்டிய விஷயம் .......