/ செய்திகள் / ஓட்டுப்போடவில்லை என்றால் கடவுள் தண்டிப்பார்: துரைமுருகன்

ஓட்டுப்போடவில்லை என்றால் கடவுள் தண்டிப்பார்: துரைமுருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காட்பாடி: சொல்லி விட்டு ஓட்டுப் போடவில்லை என்றால் கடவுள் உங்களுக்கு தண்டனை அளிப்பார் என அரசு விழாவில், பொதுமக்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில் நடைபெற்ற நல திட்ட உதவிகள் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில், அவர் பேசியதாவது: தூங்குற குழந்தைக்கும், ஓடிச்சென்று பால் கொடுக்கும் தாய் போல, தாயுள்ளத்துடன் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு உதவி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பேசிய மகிமண்டலம் பஞ்சாயத்துத் தலைவர், 'கோவில் கட்ட நிதி வேண்டும்' என கேட்டார். நாங்கள் நிதி வாங்கும் நேரம் இது.எல்லோரும் சேர்ந்து, வரும் தேர்தலிலும் எனக்கு ஓட்டு போடுங்க. உங்களுக்கு என்ன செய்யணுமோ, அதையெல்லாம் செய்கிறேன். நான் வாக்கு கொடுத்தா, அதை கட்டாயம் செய்வேன். செய்ய முடியாமல் போனால், தெய்வம் என்னை நின்று கொல்லும். அதேதான் உங்களுக்கும். சொல்லிவிட்டு ஓட்டுப் போடவில்லை என்றால், கடவுள் உங்களுக்கு தண்டனை அளிப்பார். இப்போதைக்கு மக்களுக்கும் எனக்கு ஒப்பந்தம். சொன்னபடி, நீங்கள் எனக்கு ஓட்டளித்தால், பிறகு கோவில் கட்ட நிதி கொடுப்பேன். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

kumar
பிப் 07, 2026 23:04

எந்த கடவுள் ஐயா ? கடவுளை நம்புகிறவன் ..... ன்னு உங்க தலைவர் சொன்ன அந்த கடவுளா ? அப்போ நீங்க ? சரி சரி நான் ஏதாவது சொல்ல, உங்க உலோக நாய கன் இதை நான் தான் சொன்னேன்னு திரிச்சு வுட்டுற போறாரு .


NATARAJAN R
பிப் 07, 2026 17:47

சனாதன தர்மம் பற்றி பேசிய திரு உதயநிதி ஸ்டாலினிடம் சொல்ல வேண்டும். சைவ வைணவ சமயம் பற்றி பொன்முடி பேசிய போது நீங்கள் எங்கே போனீங்க? அது சரி. நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்லும் கூட்டம். இல்லாத கடவுள் எப்படி தண்டிப்பார்? அது சரி. நீங்கள் தேர்தல் வாக்குறுதிகள் டாஸ் மார்க் மூடல் திமுக நடத்தும் சாராய ஆலைகள் மூடல் கல்வி கடன் ரத்து 3 லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு அரசு வேலை சிலிண்டர் மானியம் 100 ரூபாய் மாதம் ஒரு முறை மின் கட்டணம் ஜெ மரணம் குற்றவாளிகள் தண்டனை கொடநாடு குற்றவாளிகள் தண்டனை அனைத்து ஊழல் அதிமுக அமைச்சர்கள் கைது மற்றும் தண்டனை, செவிலியர்கள் பணி துப்புரவு பணியாளர்கள் பணி இடை நிலை ஆசிரியர்கள் பிரச்சினை நீட் தேர்வு ரத்து தமிழக நிதி நிலை சரிசெய்தல் இப்படி பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கினீர்கள். நிறைவேற்ற வில்லை. கண்டிப்பாக தெய்வம் உங்களை தண்டிக்கும்.


கூத்தாடி வாக்கியம்
பிப் 07, 2026 16:15

அது என்ன நுரை ஓட்டு போட்டவனை மட்டும் தண்டி கிற கடவுள். ஜெயிச்சு ஏ மாத்தறவனை விட்டு விடு ராரு


பாலாஜி
பிப் 07, 2026 13:33

கடவுளும் அரசியலில் ஈடுபட துரைமுருகன் கூட்டணி எப்போது ஏற்படுத்தினார்?


இந்து.
பிப் 07, 2026 13:11

ஓட்டு போட்டதால்தான் இத்தனை தண்டனை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு,குடி,லஞ்சம்,ஏமாற்றுதல் எல்லாம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 07, 2026 12:19

கடவுள் எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக உள்ளனர். என்னமே எனக்கு எது வரினும் எம்பிரான் எமக்கு யாது செய்தாலும் துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும் சோர்ந்து மா நரகத்தில் உழன்றாலும் அவனருளாளே அவன் தாழ் வணங்கி ஏற்றுக் கொள்ள மக்கள் தயார். தமிழகம் என்னும் பாற்கடலில் தேர்தல் எனும் வாசுகி பாம்பை கொண்டு கடைந்து முதலில் வரும் விஷத்தை சிவபெருமான் ஏற்றுக் கொண்டு பின்னர் வரும் அமிர்தத்தை மக்களுக்கு கொடுக்க விஷ்ணு வருவார்.


arunachalam
பிப் 07, 2026 11:09

உன்னையும், உன் குடும்பத்தையும், உன் கட்சியையும் நீங்கள் மக்களுக்கு செய்த துரோகத்துக்கு தண்டிக்காத கடவுளா எங்களை தண்டிப்பார்?


Anbuselvan
பிப் 07, 2026 10:44

பூச்சாண்டி வந்து புடிச்சுண்டு போயிடுவான், சாமி கண்ணை குத்திடும் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு திராவிட மாடல் பயந்து போய் இருக்குன்னுதான் தோணுது


Sridharan P
பிப் 07, 2026 10:32

அப்ப கவுடள் இருக்கறாற குமாரு


angbu ganesh
பிப் 07, 2026 10:05

நீங்க எல்லாரும் எங்க நம்பிக்கைக்கு எதிரானவனுங்க உங்களுக்கு நாங்க ஏன்டா வோட்டு போடணும் எங்க கடவுள் எங்களை காப்பாத்துவர் உன்னை போன்ற கொடிய வைரஸிடமிருந்து