/ செய்திகள் / ஏன் என் வீட்டில் சோதனை நடத்தவில்லை: கேட்கிறார் சீமான்

ஏன் என் வீட்டில் சோதனை நடத்தவில்லை: கேட்கிறார் சீமான்

புதுச்சேரி : '' ஏன் எனது வீட்டில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தவில்லை,'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.புதுச்சேரியில் நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சியில் இருந்து தீர்த்த பிரச்னை எது என்று சொல்ல முடியுமா? மாநிலங்கள் கொடுக்கும் நிதி தான் மத்திய அரசுக்கு நிதி.அப்புறம் அவன் என்ன எனக்கு தருவது? மத்திய அரசுக்கு வருவாய்க்கு என ஏதும் உள்ளதா? மாநிலங்கள் தரும் நிதி தான் மத்திய அரசின் நிதி.அப்புறம் நீ என்ன வட்டி கடை வைத்து இருக்கிறாயா, அரசு நடத்துகிறாயா அல்லது கந்துவட்டி கடை நடத்தி கொண்டு இருக்கிறாயா? வெள்ளைக்காரன் ஆட்சியில் மட்டும் தான் வரி கொடா இயக்கம் நடத்துவோமா?நான் முதல்வர் ஆனால், இப்படி எல்லாம் சேட்டை காட்டிருவியா நீ ?நேரடியாக கேட்கிறேன்?வரியை உனக்கு தந்துவிடுவேன் நான்? இவர்கள் லட்சம் லட்சமாக கொள்ளையடித்து வைத்திருக்கிறார்கள். வருமான வரித்துறை அமலாக்கத்துறைக்கு பயந்து கைகட்டி நிற்கிறார்கள். ஏன் என் வீட்டில் ஐடி ரெய்டு, அமலாக்கத்துறை ரெய்டு நடத்தவில்லை. காரணம் வீட்டில் ஏதும் இல்லை.நேர்மையாளனுக்கு மட்டும் தான் துணிவும் வீரனும் இருக்கும்.ஏன் என்னை அடக்கு, ஒடுக்கு பார்ப்போம். அதிகபட்சம் வழக்கு போட்டு ஜெயிலில் போடுவீர்கள். பயப்படும் ஆள் மாதிரி தெரிகிறதா? இவ்வாறு சீமான் கூறினார்.

கோபம்

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்து சிலர் தவெக என கோஷம் போட்டனர். இதனால், கோபம் அடைந்த சீமான் அவர்களை ஒருமையில் திட்டினார். நாதகவினர் அறிவார்ந்தவர்கள். தவெகவினர் கோமாளிகள், தற்குறிகள் என்றார். அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு அதனை கலைத்தனர்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

M Ramachandran
ஏப் 06, 2026 20:57

உனக்கு வாய் கொழுப்பு அதிகமாகி கிட்டு போவுது . தெருவோட பொறை சனியனையய விருந்து வச்சு கூப்பிடாதெ வினையாய் போயிடும்.


தாமரை மலர்கிறது
ஏப் 06, 2026 18:47

தேர்தல் முடியட்டும். உன்னை வைத்து செய்வார்கள்.


Anand
ஏப் 06, 2026 18:46

சரியான ஆள்.


பாலாஜி
ஏப் 06, 2026 18:07

நீ சட்ட புரம்பாக குவித்தள்ள ரொக்கம், நகைகள் மூட்டைகளை பனைமரங்களில் ஒளித்து வைத்திருப்பது வருமானவரித்துறைக்கு தெரியாது சீமான்.


R.MURALIKRISHNAN
ஏப் 06, 2026 16:51

மனநிலை சரியில்லாதவன் வீட்டில் ரெய்ட் நடத்துவதில்லை


Abdul Rahim
ஏப் 06, 2026 16:38

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்குது கருடா சௌக்கியமா பாஜக வின் பாதுகாப்பில் இருந்து கொண்டு வீராப்பு பேசுறார்.....


Marai Nayagan
ஏப் 06, 2026 20:20

சைமன் உங்கள் திருட்டு திமுகவின் நீண்ட நாள் பீனாமீ பி டீம்...திமுகவை திட்டுவது போல நடித்து திமுக எதிர்ப்பு ஓட்டை பிரித்து அவர்கள் திருடும் காசில் பங்கு போட்டு கொள்வார்கள். இப்போ எதிர்ப்பு போல முட்டு கொடுத்து வாழ்க்கை யை ஓட்டுகிறார்.


Kannuchamy Maths
ஏப் 06, 2026 16:31

ஒவ்வொரு மாநிலமும் பாரத மாதாவின் பிள்ளைகள் தான். நாடு வேறு மாநிலங்கள் வேறு அல்ல. கட்சி ,ஆட்சி, அரசியல் , உன்னை போன்றோர் வருவார்கள் போவார்கள் பாரத மாதா ஒன்று தான்.நாடு ஒன்று தான்.வாழ்க பாரதம்.


duruvasar
ஏப் 06, 2026 16:16

உங்கிட்ட இருப்பதே திரள் நிதி என்று சொல்கிறீர்.


Anbuselvan
ஏப் 06, 2026 16:14

நீங்கள் கொள்கை ரீதியாக வீராப்புடன் பேசுவீர்களே தவிர உங்களிடம் பெரிதாக ஒன்றும் தேறாது என நினைத்திருப்பார்கள். ஆனால் இப்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர் அந்த ரகத்தில் வருவார் என கூற முடியாது என நினைத்து இருக்கலாம்


Kannuchamy Maths
ஏப் 06, 2026 16:05

இன்னும் ஒரு நூற்றாண்டு கட்சி நடத்தினாலும் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது. பிரிவினை பேசுவதை நிறுத்தும் வரை.