/ செய்திகள் /  தொடரும் ரங்கசாமி பாசம்: விமர்சிக்க மறுக்கும் விஜய்

 தொடரும் ரங்கசாமி பாசம்: விமர்சிக்க மறுக்கும் விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தொடரும் ரங்கசாமி பாசம்

விமர்சிக்க மறுக்கும் விஜய்

த.வெ.க., துவங்கிய பின், புதுச்சேரிக்கு விஜய் இருமுறைதான் வந்திருக்கிறார். அதாவது, கடந்த டிசம்பர் 9ம் தேதி, புதுச்சேரி வந்த விஜயக்கு கடுமையான கட்டுப்பாடுகளை, புதுச்சேரி அரசு விதித்தது. ஆனாலும், அப்போதும் ரங்கசாமி அரசை விஜய் விமர்சிக்கவில்லை. வெறுமனே, ரேஷன் கடை விவகாரத்தை மட்டுமே விஜய் பேசினார். தனக்கு ரங்கசாமி மிக நெருக்கமானவர் என்பதால், அவர் மீது எப்போதுமே பாசமாக இருப்பார். இதனால்தான், அந்த கூட்டத்தில் ஒரு முறைக்கூட ரங்கசாமி பெயரை, விஜய் உச்சரிக்கவில்லை. இந்நிலையில் நேற்று, புதுச்சேரிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய சென்ற விஜய், இம்முறையும் ரங்கசாமி குறித்து எதுவுமே பேசவில்லை. தேர்தல் நெருக்கத்திலும், ரங்கசாமி மீதான பாசம் விஜய்க்கு குறையவில்லை. தமிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசை விமர்சனம் செய்து, போட்டியை தீவிரப்படுத்துகிறார் விஜய். ஆனால், புதுச்சேரியில் ஆளும் ரங்கசாமி பெயரை கூட உச்சரிப்பதில்லை. ஆளும் அரசையும் முதல்வரையும் விமர்சிக்காமல், எப்படி ஓட்டு கேட்பது என குமுறி வருகின்றனர், புதுச்சேரி த.வெ.க., நிர்வாகிகள்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஏப் 05, 2026 12:18

ஏதோ இருக்கு.


DINESH ARAVINDH B
ஏப் 05, 2026 10:45

தமிழகத்தில் எதுவும் தேறவில்லை என்றால் புதுச்சேரியில் துணை முதல்வர் பதவியாவது கிடைக்கும் என்று கனவு காண்கிறார் போல...


vivek
ஏப் 05, 2026 07:04

தேர்தலுக்கு பின் மார்ட்டின் மகன் துண முதல்வர், ரங்கசாமி முதல்வர் தவெக எம்எல்ஏக்கள் ஆதரவு. பாஜக கழற்றி விடப்படும்.இது நடக்கும்.