திட்டக்குடி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சீல்
திட்டக்குடி: சட்டசபை தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் தேதியை நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், மாவட்ட தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் அறிவுறுத்தலின்பேரில், திட்டக்குடி (தனி) தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு, தேர்தல் துணை தாசில்தார் சீனிவாசன் தலைமையிலான ஊழியர்கள் பூட்டி 'சீல்' வைத்தனர். இதேபோன்று, பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகத்தில் சேர்மன் அறை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
கடைசி நாளில் 20 அரசாணைகள்; வீட்டுவசதி துறையில் நிறுத்தி வைப்பு
மார் 18, 2026 05:11 am
ரஜினியை விமர்சித்த ஆதவ் அர்ஜூனாவை விஜய் கண்டிக்காதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
மார் 18, 2026 04:50 am