/ செய்திகள் / மதுரையில் களமிறங்குகிறார் சுந்தர் சி!: அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டி

மதுரையில் களமிறங்குகிறார் சுந்தர் சி!: அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி போட்டியிடுகிறார் என புதிய நீதிக்கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் ஆகியவை பாஜ சார்பில் வரும் திங்கள் கிழமை அறிவிக்கப்பட உள்ளது. அறிவிப்பு வெளியானதும் முறைப்படி வேட்பாளரை அறிமுகப்படுத்த உள்ளோம். இவ்வாறு ஏ.சி. சண்முகம் கூறியுள்ளார்.

சுந்தர். சியின் மனைவி குஷ்பு, பாஜவில் உள்ளார்.

மதுரை மத்திய தொகுதி தற்போது திமுகவின் வசமுள்ளது. கடந்த 2021 தேர்தலில் இங்குப் போட்டியிட்ட அமைச்சர் தியாகராஜன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
மார் 28, 2026 15:27

ஃப்ரெண்ட்லி ஃபைட்.


A.Gomathinayagam
மார் 28, 2026 14:00

அதாவது ஓட்டு வங்கி இல்லாத பிரிவினருக்கு எந்த கட்சியு ம் வாய்ப்பு கொடுக்காத நிலையில் இந்த கட்சி கொடுத்திருக்கிறது .வெற்றி பெறுவாரா ??:


chennai sivakumar
மார் 28, 2026 13:53

சினிமா கவர்ச்சி திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் முன்னால் அறிவு ஜீவி ஆட்டம் கண்டுவிடும்


bharathi
மார் 28, 2026 13:38

Just a dummy nomination


lana
மார் 28, 2026 13:31

அந்த அறிவு ஜீவி ஐ அந்த கட்சியே தூக்கி எரிந்து விட்டது


கேடி ராகவன் ஐயங்கார்
மார் 28, 2026 13:12

அறிவுஜீவி பழனிவேல் தியாகராஜன் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார். வெற்றி வித்தியாசத்தை அதிகரிக்க மட்டுமே உழைக்கவேண்டும்.


Arjun
மார் 28, 2026 14:13

அறிவுஜீவிதான் ஆனால் இருக்கும்