/ செய்திகள் / தொகுதி பங்கீடு: தி.மு.க., நிபந்தனையால் வி.சி., திணறல்

தொகுதி பங்கீடு: தி.மு.க., நிபந்தனையால் வி.சி., திணறல்

- நமது சிறப்பு நிருபர் -கடந்த சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., கூட்டணியில் முதல் கட்சியாக தொகுதி பங்கீட்டை முடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இப்போது தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் திணறுகிறது. இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தொகுதி பங்கீடு குறித்து, வி.சி., தலைவர் திருமாவளவனுடன், தி.மு.க., மூத்த அமைச்சர்கள் ஏற்கனவே பேசியுள்ளனர். வி.சி., தரப்பில், 'எங்கள் கட்சிக்கு இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்; இந்த தேர்தலில் எட்டு தொகுதிகள் ஒதுக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது. அதற்கு, 'கூட்டணியில் ஆரம்பம் முதல் நம்பிக்கைக்கு உரியவராக திருமாவளவன் உள்ளார். கூட்டணியில் அதிக கட்சிகள் இணைந்துள்ளன; அவர்களுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். பழைய எண்ணிக்கையில் ஒன்றாவது குறைத்துக் கொள்ளுங்கள்' என, தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதை, திருமாவளவன் ஏற்கவில்லை. பின், 'மூன்று பொது தொகுதிகள் உட்பட எட்டு தொகுதிகள் தர வேண்டும்; ஒரு தொகுதியை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தர வேண்டும்' என, வி.சி., தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. 'சரி தருகிறோம். ஆறு தொகுதிகளில் பானை சின்னத்தில் நிற்கலாம். ஒரு தனி மற்றும் பொது தொகுதியில் மட்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும்' என, தி.மு.க.,வால் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு, 'கடந்த தேர்தலில் தான் எங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது; எனவே, இந்த தேர்தலில், சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம்' என, வி.சி., தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

CHELLAKRISHNAN S
மார் 19, 2026 15:43

this was fitsr started by p.chidambaram in 2004


M Ramachandran
மார் 19, 2026 13:25

நல்ல மூகறுப்பு. ஸ்டாலின் நல்ல வசிய செய்ராரு. காரணம் சமீபித்து திருமா அண்ட் கம்பெனி செய்த அடிதடி பிரச்சனை காரணம். வக்கீல்கள் இடம் நல்ல பெயரெடுக்க.


ஆகுயர்த்தோன்
மார் 19, 2026 13:05

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நடக்க வில்லை MLA CERTIFICATE உறுதி செய்யப்பட்டு சட்டசபைக்கு செல்லும் நிலை உறுதி செய்ய படுகிறது


பேசும் தமிழன்
மார் 19, 2026 19:27

ராகுல் சொன்னது போல் ஓட்டு திருட்டு மூலம் வெற்றி பெற ஏதாவது திட்டம் இருக்கிறதா... சர்டிபிகேட் முதற்கொண்டு அச்சு அடிப்பதாக ஆ‌குயர் சொல்கிறார் என்றால்..... அதில் ஏதாவது சூட்சமம் ஒழிந்து இருக்க வாய்புள்ளது.


ganesan
மார் 19, 2026 12:11

கடைசியில் பிஜேபி உள்ள வந்திரும் , குடுக்கிறதை வாங்கிக்க


ஆகுயர்த்தோன்
மார் 19, 2026 13:23

சாரி ஸ்டாலின் இருக்கும்வரை அது நடக்காது


duruvasar
மார் 19, 2026 13:46

சரியாய் சொன்னீங்க. மோடி பெயரை சொல்லாமல் ஒரு டீ பொட்டலம் கூட விக்கமுடியாது


krishna
மார் 19, 2026 16:32

AARUYIRTHON ENNA KEVALAM ULAGAM POTTRUM DHEIVIGAM DESA PATTRU NO 1 SINGA THALAIVAN MODI ENGE ONNUKKUM UDHAVAADHA KOMALI THUNDU SEATTA PAARTHU KOODA THAPPUM THAVARUMA PESUM UN THALA ENGE.MURASOLI THUDAITHA MOOLAYODU SINDHIKKA THERIYAAMA ALAYUM KOMAALIYE MUNNERUM VAZHI THEDU.AZHUKKALAYAM ADAPPU EDUKKUM KOTHADIMAI AAGA ALAYAADHE.


Barakat Ali
மார் 19, 2026 11:52

விசிகவை வறுத்தெடுங்க என்று பாசக திமுகவிடம் சொல்லிடுச்சு ..........


Ms Mahadevan Mahadevan
மார் 19, 2026 11:26

இந்த கூட்டமே போலி மத சார்பின்மை போலி சமூக நீதி பேசும் கோழைகள். இந்த தேர்தலில் சரியான பாடம் கற்றுக் கொடுக்க மக்களே தயாராக இருக்கிறோம்


Anantharaman Srinivasan
மார் 19, 2026 10:54

திருமாவின் இறுதி முடிவு.. மானமா, ரோஷமா..?


Ms Mahadevan Mahadevan
மார் 19, 2026 11:28

சூட்கேசை தவிர வேறு ஒன்றும் இல்லை


பேசும் தமிழன்
மார் 19, 2026 12:45

இரண்டும் இல்லை.... பெட்டி தான் முக்கியம்


M Ramachandran
மார் 19, 2026 13:45

அவரிடம் ரெண்டுமெ கிடையாது.


GoK
மார் 19, 2026 10:29

திராவிட மாடலில் ஆளும் குடும்பம் என்ன கொடுக்கிறதோ அதைவச்சுகிட்டு வாய மூடிட்டு இருக்கோணும்.


Rathna
மார் 19, 2026 10:20

ஹிந்து விரோதிக்கு, சாதீய அமைப்புக்களுக்கு கிடைக்கும் சாட்டையடி இந்த தேர்தலில் எதிரொலிக்க வேண்டும்.


rama adhavan
மார் 19, 2026 10:11

வேறு கட்சியின் சின்னத்தில் நிற்கும் ஓரு கட்சியின் வேட்பாளர்கள் முதலில் தங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரலரிந்து ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது போட்டியிடும் மாற்றுக் கட்சியினரின் உறுப்பினர் தான் என பரிந்துரை செய்யும் கட்சியும் போட்டியிடுபவரும் சான்றளிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் வற்புறுத்த வேண்டும். அப்போது தான் கூட்டணி பேரங்கள் குறையும்.