பதவி கேட்டு கடிதம் வழங்கினார் சரத்குமார்
சென்னை: சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த சரத்குமார், தன் கட்சியை பா.ஜ.,வில் இணைத்து இரண்டு ஆண்டுகளாகியும், அவருக்கு கட்சியில் பதவி ஏதும் வழங்கப்படவில்லை. இதையடுத்து, தன் ஆதரவாளர்களுடன், சென்னை, தி.நகரில், நேற்று முன்தினம் அவர் ஆலோசனை நடத்தினார். பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கடந்த 2024 மார்ச் 12ல், பா.ஜ.,வில் இணைந்தோம். இதுவரை எனக்கும், மற்றவர்களுக்கும் பதவி வழங்கவில்லை என்ற ஆதங்கம் நிர்வாகிகளிடம் உள்ளது. எனக்கும் ஆதங்கம் இருக்கிறது. 'பதவி இருந்தால் தான், என்னால் செயல்பட முடியும். இது தொடர்பாக, கட்சியில் கடிதம் வழங்க உள்ளேன்' என்றார். அதன் தொடர்ச்சியாக, சென்னையில் நேற்று காலை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து, பதவி கேட்டு வேண்டுகோள் கடிதத்தை சரத்குமார் வழங்கினார். பின் அவர் கூறுகையில், “வேண்டுகோள் கடிதம் கொடுத்தேன். 'நீங்கள் சொல்வது நியாயம் தான், பரிசீலனை செய்கிறேன்' என, நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ''என் ஆதங்கத்தை தெரிவித்து விட்டேன்; தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் கோவை செல்ல இருப்பதால், சென்னை வந்த மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலை சந்திக்கவில்லை,” என்றார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பாவம்.. பரிதாபத்துக்கு உரிய நபர் தேவையா இவ்வளவு கேவலம்??
இவருக்கு பதவி கொடுப்பதும் பா ஜ க வை .... ஏற்றுவதும் ஒன்று தான்.
தொகுதி பங்கீட்டில் தமாகாவுக்கு அதிருப்தியா? பரவிய வதந்திக்கு ஜிகே வாசன் முற்றுப்புள்ளி
மார் 24, 2026 10:49 am
புதுச்சேரியில் தனித்துப்போட்டி; கூட்டணியால் தேவையற்ற மன உளைச்சல் என்கிறார் திருமா
மார் 24, 2026 10:58 am