ரூ.1.64 லட்சம் பறிமுதல்
புவனகிரி: உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 1.64 லட்சம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புவனகிரி சட்டசபை தொ குதி நிலையான தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வகுமார் தலைமையிலான குழுவினர் நேற்று காலை, 8:30 மணிக்கு கீரப்பாளையம்-புவனகிரி இணைப்பு பாலக்கரையில் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ரூ.1.64 லட்சம், எந்த ஆவணமும் இன்றி எடுத்து செல்லப்பட்டது கண்டறியப் பட்ட து. உடன் பணத்தை பறிமு தல் செய்து புவனகிரி தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கமணியிடம் ஒப்படைத்தனர். அப்போது தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தமிழ்ச்செல்வன், ராமதாஸ், உதவி அலுவலர் கோவிந்தன்,பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை! தேர்தல் செலவின பார்வையாளர் எச்சரிக்கை
மார் 19, 2026 06:19 pm