/ செய்திகள் / புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 13 பேர் பட்டியல் வெளியானது.புதுச்சேரியில் அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இண்டி கூட்டணியில் காங்.,-தி.மு.க., அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்ததால் குழப்பம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையும் ஜவ்வாக இழுத்தது. பல கட்ட பேச்சுக்கு பின் தொகுதி பங்கீடு முடிவு எட்டப்பட்டது. காங்., - 16, தி.மு.க., - 13, இந்திய கம்யூ., ஒரு தொகுதி என முடிவாகி உள்ளது.இந்நிலையில் இன்று (மார்ச் 24) சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 13 பேர் பட்டியல் வெளியானது. அதன் விபரம் பின்வருமாறு:

திமுக வேட்பாளர்கள்

1. வில்லியனுார் - சிவா2.மங்கலம் - ரங்கன்3.திருபுவனை - அங்காளன்4.பாகூர் - செந்தில்குமார்5.முதலியார்பேட்டை - சம்பத்6.உப்பளம் - அனிபால் கென்னடி7.உருளையன்பேட்டை- கோபால்8.நெல்லித்தோப்பு - கார்த்திகேயன்9.ராஜ் பவன் - விக்னேஷ் கண்ணன்10.காலாப்பட்டு - செந்தில்11.கதிர்காமம் - வடிவேலு12.காரைக்கால் தெற்கு - நாஜிம்13.நிரவி டிஆர் பட்டினம்- நாக தியாகராஜன்

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !