/ சொன்னவை செய்யாதவை / ஊரக வளர்ச்சி துறையில் அறிவித்து செயல்படுத்தாத திட்டங்கள்

ஊரக வளர்ச்சி துறையில் அறிவித்து செயல்படுத்தாத திட்டங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஊரக வளர்ச்சி துறைக்கு, 22,000 கோடி ரூபாய்க்கு மேல், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிதியில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள், செயல்பாட்டிற்கு வரவில்லை. அவற்றின் விபரம்: * ஊரகப் பகுதிகளில், வீடுகளில் வெளியேறும் கழிவுநீரை, மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில், 350 கி.மீ., வடிகால் வசதிகள், மத்திய - மாநில அரசு நிதியில், 431 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்* சமூக பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, விருதுகள் வழங்கப்படும்* அனைத்து சமூகத்தினரும் பயன்படும் வகையில், 20 முன்மாதிரி எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்* ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்வு மையம் அமைக்கப்படும். இணைய வழியில் பெறப்படும் புகார்களுக்கு தீர்வு காணப்படும் * கிராமப்புறங்களில் 170 கோடி ரூபாய் செலவில், 45,000 இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்கப்படும்* தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக, 1,000 கோடி ரூபாய் மதிப்பில், தனிநபர் மற்றும் சமுதாய சொத்துக்கள் உருவாக்கப்படும்* ரத்த சோகையை குறைக்கும் வகையில், 137 கோடி ரூபாய் மதிப்பில், 21 லட்சம் முருங்கை மரங்கள் வளர்க்கப்பட்டு, 10.5 லட்சம் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும்* முதல்வரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த, துவக்க பள்ளிகளில் 154 கோடி ரூபாயில், 2,043 உணவுக் கூடங்கள் கட்டப்படும்* கிராமப்புறங்களில், 500 டன் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி, 1,500 கி.மீ., நீளமுள்ள ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்* மழைநீரை சேகரிக்க கிராமங்களில், 5,000 புதிய சிறு குளங்கள், 250 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்* பருவமழைக் காலங்களில் மக்கள் பயன்படுத்த, 800 கோடி ரூபாய் மதிப்பில், கிராம சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும் * வன உரிமை சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு, 10 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும். இதன் வாயிலாக, ஊராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rubasundar
மார் 30, 2026 10:41

super


vijay
மார் 30, 2026 08:34

இந்த ஆட்சியில் செயல்பாடுகள் அனைத்தும் மோசமே


krishnamurthy
மார் 30, 2026 08:18

இவை மட்டும்தானா