/ செய்திகள் / 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் பாமக ராமதாஸ்

3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் பாமக ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தன் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மூன்றாம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.சசிகலாவின் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி சேர்ந்து, சட்டசபை தேர்தலை சந்திக்கிறார் ராமதாஸ். தன் தரப்பில் தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்களின் பட்டியலை, ஏற்கனவே இரண்டு கட்டங்களாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, மூன்றாவது கட்டமாக ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதன்படி, அணைக்கட்டில் வெங்கடேஷ், ஆற்காட்டில் அஜய்ராஜ், அரக்கோணத்தில் வெற்றிவேல், கீழ்வேளூரில் வேதமுகுந்தன், சோளிங்கரில் விஜயன், திட்டக்குடியில் கருப்பன் மாணிக்கம், ஆரணியில் கலைமணி, கீழ்பென்னாத்துாரில் ஜானகிராமன், ஓமலுாரில் சுரேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.மேலும், உத்திரமேரூர் தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஸ்ரீதருக்கு பதிலாக, மாநில மகளிரணி செயலர் சரளா ராஜு போட்டியிடுவார் என ராமதாஸ் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சிவா. தொதநாடு.
ஏப் 02, 2026 23:10

மரத்தை வெட்டி இயற்கை அழித்த பாவம் உங்களை சும்மா விடாது நிம்மதியாக இருக்க முடியவில்லை இந்த வயதில் கூட


Vaithi
ஏப் 02, 2026 23:06

இவருக்கு இந்த வயதில் இருக்கும் சுறுசுறுப்பு ராகுல் காந்தியிடம் இல்லை


Vasan
ஏப் 02, 2026 21:04

மருத்துவர் ஐயா எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறார் ?


Vaithi
ஏப் 02, 2026 23:15

அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டி இட போகின்றார்?


SUBBU,MADURAI
ஏப் 02, 2026 20:44

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இந்த ராமதாஸ் அறிவித்த வேட்பாளர்கள் அனைவரும் மிகக் கேவலமாக தோல்வி அடைவதுடன் டெபாசிட் தொகையையும் இழப்பது உறுதி


Vaithi
ஏப் 02, 2026 23:14

இவர் வேட்பாளர்கள் போட்டி இடும் தொகுதிகளில் அதிமுக, பாஜாக, அன்புமணியின் அடிமைகள் தோற்றால் பெரியவர் வெற்றி பெற்ற மாதிரிதான்