ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனுக்கு தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிவிக்கப்பட்டு உள்ளார்.அதிமுகவில் இபிஎஸ் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஓபிஎஸ். எவ்வளவோ முயன்றும் கட்சியில் மீண்டும் நுழைய வாய்ப்பு கிடைக்காமல் போக கடும் அதிருப்தி + விரக்தியில் இருந்து ஓபிஎஸ், பிப்.27ம் தேதி தமது மகன் ரவீந்தரநாத் உடன் திமுகவில் ஐக்கியமானார்.திமுக தலைவர் வாய்ப்பு தந்தால் போடி தொகுதியில் போட்டியிடுவேன் என்று ஓபிஎஸ் கூறி வந்தார். மேலும், திமுகவை ஆதரித்தும், இபிஎஸ்சை கடுமையாக விமர்சித்தும் கட்சி மேடைகளில் பேசியும், பேட்டியும் அளித்து வந்தார்.இந் நிலையில். எதிர்பார்க்கப்பட்ட படியே ஓபிஎஸ் போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியிட திமுக சீட் வழங்கி உள்ளது. 2 மாதங்கள் முன்பு அதிமுகவின் அதிதீவிர விசுவாசி மற்றும் கொள்கை பிடிப்பாளராக எந்த தொகுதியில் இருந்து வந்தாரோ, அதே தொகுதியில், இப்போது திமுக வேட்பாளராகவும், உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு கேட்டும் தொகுதி முழுக்க ஓபிஎஸ் வலம் வர உள்ளார்.இதே போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.டி.நாராயணசாமியை இபிஎஸ் அறிவித்துள்ளார்.இதேபோன்று சமீபத்தில் கட்சி மாறி வந்த வைத்திலிங்கத்துக்கு ஒரத்தநாட்டிலும், மனோஜ் பாண்டியனுக்கு ஆலங்குளத்திலும் போட்டியிட திமுக சீட் வழங்கி உள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மானம் கெட்ட பிழைப்பு
சந்தர்ப்பவாதிகளுக்கு ஆதரவு தரவே கூடாது - தமிழக மக்கள் இளிச்சவாயர்கள் என்று முடிவு கட்டி விட்டார்கள். டெபாசிட் கூட திரும்ப வராத அளவுக்கு மக்கள் தீர்ப்பு சொன்னாலொழிய இவர்களின் தைரியம் கிஞ்சித்தும் குறையாது!
பச்சோந்தி மிக்ஸர் மாமா பை பை
இந்த தேர்தலோடு இவர்களின் அத்தியாயம் முடிவு பெறும்.
மனித இனத்தின் கேடு கெட்ட உயிர ணம் O.P S
இவங்க முகத்தை பார்க்கவே சகிக்கலை மிக கேவலமான அரசியல் சாக்கடைகள் பணம் பதவிக்காக தொகுதி மக்களை எந்த அளவு முட்டாள்களாக பார்கின்ற அயோக்கியர்கள்
கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு இப்படியெல்லாம் பேசக்கூடாது.
கண்ணாடி முன் நின்று பேசுவதில் விடியலை வெல்ல இந்த பூவுலகில் வேறு எவரும் பிறக்கவில்லை.
மேலும் செய்திகள்
17 அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு: ஸ்டாலினுக்கு எதிராக முன்னாள் கவுன்சிலர்
மார் 30, 2026 12:18 am