/ ஒரே கேள்வி பளிச் பதில் / ஒரே கேள்வி: தி.மு.க.வை., நம்பி ஏமாந்து விட்டீர்களா?
ஒரே கேள்வி: தி.மு.க.வை., நம்பி ஏமாந்து விட்டீர்களா?
| ADDED : மார் 26, 2026 12:30 AM
பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாகக் கூறிய தி.மு.க., அதை நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தி.மு.க.வை., நம்பி ஏமாந்து விட்டீர்களா?
நிச்சயம் ஏமாந்து விட்டோம். கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தியபோது, எங்களை ஏமாற்றுவதற்காக ஒரு குழு அமைத்தனர். அந்த குழு கருத்து கேட்டபோது, மொத்தமுள்ள 194 சங்கங்களில், 193 சங்கங்கள், 'பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என ஒருமித்த குரலில் வலியுறுத்தின. ஆனால், யாரிடமும் எந்தவித கருத்துகளையும் கேட்காமல், இந்தியாவில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையாக, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை அறிவித்துள்ளனர். மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் எனும் யு.பி.எஸ்., கொண்டுவந்தபோது, அதற்கு எதிராக குரல் கொடுத்த தி.மு.க., தற்போது, அதைவிட மோசமான ஒரு ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அரசாணை வெளியிடப்பட்டு, இப்போது வரை, அந்த திட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்த போகிறோம் என்பதை அறிவிக்கவில்லை. மூடு மந்திர மாகவே, ஆட்சியை முடித்து விட்டனர் என்ற கோபம், வருத்தம், ஆதங்கம் எல்லாம் எங்களுக்கு உள்ளது.- பிரடெரிக் எங்கெல்ஸ் , மாநில ஒருங்கிணைப்பாளர்,சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம்தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Dr. Suriya
மார் 26, 2026 03:24
ஸ்டாலினின் மைண்ட் வாய்ஸ் " சாருக்கு திருநெல்வேலி இருட்டு கடை அல்வா ஒரு கிலோ பார்சல்" ....
மேலும் ஒரே கேள்வி பளிச் பதில்
வெளிமாநிலத் தொழிலாளர்களை, தி.மு.க.,வினர் மேடைகளில் அவதுாறாகப் பேசுவது சரியா?
மார் 31, 2026 02:27 am