உரிமைகளை மீட்டெடுக்க தி.மு.க.,வால் தான் முடியும்
சிறுபான்மை மக்களுக்கு காவலாக தி.மு.க., திகழ்கிறது. பா.ஜ.,வுடன் அ.தி.மு.க.,வும் சேர்ந்து கொண்டு தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது. சி.ஏ.ஏ., சட்டத்தை பா.ஜ., கொண்டு வந்தபோது, அ.தி.மு.க., அதை ஆதரித்து ஓட்டு போட்டது. நான் பொது வாழ்க்கைக்கு வந்தபோது, எதிர்கொண்ட முதல் கைது நடவடிக்கை, சி.ஏ.ஏ., சட்டத்தை கிழித்ததால் தான் நிகழ்ந்தது. சிறுபான்மையின மக்களுக்கு உள் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, தி.மு.க., தான் கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அடிமை கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளனர். மோடிக்கு பழனிசாமிதான் முரட்டு அடிமை. தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தான், மொழி, இனம் மற்றும் மாநில உரிமைகளை மீட்டெடுக்க முடியும். - உதயநிதி, துணை முதல்வர், தி.மு.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திருடிய செங்கல் வேண்டாம் , ஆனால் பொதுmaக்களிடம் மாதா மாதம் திருடிய 30000 கோடி ரூபாய் x 12 X 5 + வட்டி பணம் என்று எல்லாத்தையும் நாங்க மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் ?
ஜோக் அடிப்பதில் கனிமொழியை மிஞ்சுடுவார் போலிருக்கிறது
மேலும் செய்திகள்
உதயநிதி சொத்து மதிப்பு ரூ.33.92 கோடி; ரூ.1 கோடி டிபென்டர் கார் வைத்துள்ளார்
ஏப் 03, 2026 03:47 am
பிரதமர் மோடியை திட்டுபவர்கள் இந்தியராக இருக்க முடியாது ராஜேந்திர பாலாஜி பேச்சு
ஏப் 03, 2026 02:26 am