/ செய்திகள் /  மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வர அதிகாரிகள் துணை நிற்கணும்

 மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வர அதிகாரிகள் துணை நிற்கணும்

கடந்த, ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க., அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசு அதிகாரிகள் பெருந்துணையாக இருந்துள்ளனர். பணி நிமித்தமாக, சில நேரங்களில் அரசு அதிகாரிகளிடம் கடுமையாக பேசியிருந்தால், அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகாரிகள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி உள்ளீர்கள். திருச்சி மாவட்டம் முசிறி ராசியான ஊர். தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. கடந்த முறை எங்களின் தேர்தல் பணி, முசிறியில் தான் துவங்கியது. அப்போது வெற்றி கிடைத்தது. ஆட்சியின் கடைசி நிகழ்ச்சியும் இங்கு தான் நடக்கிறது. தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர அரசு அதிகாரிகள் துணை நிற்க வேண்டும். - நேரு, தமிழக அமைச்சர், தி.மு.க.,@@


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Makkal Manam
மார் 16, 2026 11:11

மோசமான மற்றும் திமுக ஆதரவு அரசு ஊழியர்கள் முதலில் அழிய வேண்டும். திமுக தன்னால் அழியும்


sankar
மார் 16, 2026 09:09

இப்படி பேசுவது அதிகார துஸ்பிரயோகம் - கண்டனத்திற்கு உரியது