/ செய்திகள் /  கருத்துகணிப்பில் நம்பிக்கை இல்லை

 கருத்துகணிப்பில் நம்பிக்கை இல்லை

யார், யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், அதைப்பற்றி தி.மு.க.,வுக்கு கவலை இல்லை; எந்த விதமான பாதிப்பும் இல்லை. தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல், தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.இடையில் வருவதெல்லாம் கடந்து செல்லும் மேகங்கள் போன்றவை. கருத்துக்கணிப்பின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. கருத்துக்கணிப்புகள் எப்படி வருகின்றன என்று எனக்கு தெரியும். லோக்சபா தேர்தலில் 400 தொகுதிகளில் பா.ஜ., ஜெயிக்கும் என்று எல்லா கருத்து கணிப்புகளிலும் சொன்னார்கள். ஆனால், என்ன ஆனது; பெரும்பான்மை இல்லாமல் மைனாரிட்டியாகத்தான் வென்றது. அயோத்தியிலேயே பா.ஜ., தோற்றது. - ஆர்.எஸ்.பாரதி, அமைப்பு செயலர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !