/ செய்திகள் / அடுத்தடுத்து எதிர்ப்பு: அமைச்சர் அனிதா தவிப்பு!

அடுத்தடுத்து எதிர்ப்பு: அமைச்சர் அனிதா தவிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம், ஏதாவது ஒரு காரணத்தை கூறி, மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிர்ச்சியில் உள்ளார். திருச்செந்துார் தொகுதியில், தொடர்ந்து ஏழாவது முறையாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன், கள்விளை என்ற கிராமத்திற்கு பிரசாரத்திற்கு சென்ற அவரது வாகனத்தை, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர். இந்நிலையில், கோட்டூர் பகுதி பகுதியில், நேற்று இரவு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரசார வாகனத்தை, 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். அமைச்சரின் சமாளிப்பை ஏற்காத மக்கள், அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அந்த பகுதியில் பிரசாரம் செய்யாமல், அவர் வாகனத்தில் அங்கிருந்து கிளம்பி சென்றார். தொகுதிக்குள் ஓட்டு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அமைச்சர், அவரது ஆதரவாளர்கள் பரிதவித்து நிற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Chandru
ஏப் 07, 2026 10:08

I understand from my tuticorin friends that he is a GOON


subramanian
ஏப் 07, 2026 08:26

உண்மையில் மக்களுக்கு எல்லாம் புரிந்து விட்டது.


sankaranarayanan
ஏப் 07, 2026 02:32

இதுபோன்றே எல்லா திராவிட மாடல் அரசு அமைச்சர்களுக்கும் மக்கள் எதிர்ப்பு வரவேற்பு தெரிவித்தால் அவர்கள் திருந்துவார்கள் இந்தமுறை தேர்தலிலுருந்து சற்றே ஒய்வு பெற்று தாங்கள் செய்த தவறுகளை ஆராய்ந்து திருத்திக்கொண்டு அடுத்த தேர்தலில் சமாளிப்பார்கள் ஆனால் இந்த தேர்தலில் மக்கள் தமிழ்நாடு முழுவதுமே பெண்கள் தாய்மார்கள் ரொம்ப ஆவேசமாக இந்த ஆட்சியை அகற்ற முற்படுகிறார்கள் வெற்றியே கிட்டட்டும் .


Bharath Sundar
ஏப் 07, 2026 01:54

ஊருக்கு எந்த நன்மையும் செய்யாதவர்களில் இவர் முக்கியமானவர்.