புதுச்சேரியில் மார்க்சிஸ்ட்டும் தனித்து போட்டி
புதுச்சேரி: புதுச்சேரியில் விசிகவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியும் தனித்து களமிறங்குகிறது.புதுச்சேரியில் காங்., -16; தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் 14 போட்டியிட பங்கீடு செய்யப்பட்டது. தி.மு.க., தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மனு தாக்கல் செய்தவர்களுக்கு மட்டும் 'பி' படிவம் வழங்கியது. இதனால், பி படிவம் வழங்காதவர்களின் மனுக்கள் தள்ளுபடியாகின.
இந்திய கம்யூ., விமர்சனம்
இந்நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூ., மாநில செயலர் சலீம் மனு தாக்கல் செய்திருந்தார். அதே தொகுதிக்கு காங்., மாநில செயலர் வைத்திலிங்கமும் மனு தாக்கல் செய்துள்ளது கூட்டணி கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், சலீம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். பிறகு அவர் கூறியதாவது: காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு ஆதரவு இல்லை. காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை. காங்., வைத்திலிங்கம் கூட்டணி தர்மத்தை மீறி வேட்புமனு தாக்கல் செய்தார். திமுகவும், காங்கிரசும் எதிரெதிராக போட்டியிடுவதால் கூட்டணி உடைந்துவிட்டது.வேட்புமனு வாபஸ் நிறைவடைந்த நிலையில், திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சியினர் அதனை வாபஸ் பெறவில்லை.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கொள்கை பிடிப்புள்ள கூட்டணி எங்களது இண்டி கூட்டணி என்று எங்கோ பேசியதாக நியாபகம்.
தமிழ்நாட்டிலும்.... இண்டி கூட்டணி ஆட்கள் இதே போல.., உங்களுக்குள் அடித்து கொண்டு...... தோல்வியை தழுவினால்.... அது இந்திய நாட்டுக்கு நல்லது..... குறிப்பாக தமிழ் நாட்டுக்கு !!!
இங்க மட்டும்தான் பெட்டி குடுப்பாங்கலாமாம்
டுபாக்கூர் கூட்டணி ஹீஹீஹீ
இவய்ங்க எல்லோருமே கொள்கை பிடிப்புள்ள பலமான கூட்டணி கட்சிகளாம்.
தேர்தல்ல நிக்க 30 பேர் ஆளு வேணுமே என்ன செய்ய , இலங்கைல இருந்து ஒரு 22 பெற வர சொல்லுங்க தமிழ்நாட்டுல நாம 8 பேர் இருக்கோம் , தனிச்சி நின்னுடலாம்
எதுக்கு கூட்டணி , அதுக்கு பதிலா நீங்க கட்சியை கலைச்சிட்டு திமுகவில் சேந்துட்டா என்ன
இவங்க எல்லா இடத்திலேயும் ஒருவருக்கொருவர் அடுச்சுக்குவாங்க, ஆனால் இங்கே மட்டும் கூட்டணி என ஊரை ஏமாத்துவாவங்க.
இந்த மாதிரியான டூபாகூர் நிலைபாடு அவமானமாக படவில்லையா தமிழகத்தில் தனித்து நிற்க வேண்டியது தானே. இங்கே மிக பெரிய கும்பல் கூட்டணிகட்சிகள் பணத்திற்கு பேயாக அலைகிறான்கள். மானம் கெட்ட கூட்டணி.
மேலும் செய்திகள்
துரோகத்துக்கு இலக்கணம் ஸ்டாலினும் கருணாநிதியும் தான்..: இபிஎஸ்
ஏப் 05, 2026 10:31 pm