/ செய்திகள் / விஜயை விமர்சிக்க மாட்டேன்; குஷ்பு

விஜயை விமர்சிக்க மாட்டேன்; குஷ்பு

நமது நிருபர்மதுரை மத்தி தொகுதியில், தே.ஜ., கூட்டணியில், புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் சினிமா இயக்குனர் சுந்தர்.சி போட்டியிடுகிறார். இவர், , தன் மனைவியும் தமிழக பா.ஜ., துணைத்தலைவருமான நடிகை குஷ்புவுடன் சென்று, வேட்புமனு தாக்கல் செய்தார்.அப்போது, குஷ்பு அளித்த பேட்டி:என் கணவர், நேரடி அரசியலில் களம் காண்கிறார். அவரை வெளியூர்காரர் என்று சொல்ல முடியாது. இனி, மதுரையில் வீடு வாங்கி, இங்கு தான் இருப்பார். அவரை, 'அண்ணன் சுந்தர் சி' என்று தான் மதுரை மக்கள் பார்க்கின்றனர். எதிலும், 100 சதவீதம் வெற்றி பெற முடியும் என்றால் தான், அவர் களம் இறங்குவார். அப்படித்தான், தேர்தலிலும் களம் இறங்குகிறார். பாரம்பரியம், குடும்ப அரசியல்வாதி என்பதற்காக மக்கள் ஓட்டளிக்கும் காலம் போய்விட்டது.ஏற்கனவே, த.வெ.க., தலைவர் தம்பி விஜய்க்கு, வாழ்த்து தெரிவித்துள்ளேன். அரசியல் களத்தில், தம்பி விஜயை நான் விமர்சிக்க மாட்டேன். அவரால், அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பு என சொல்ல முடியாது. தமிழகத்தில் தி.மு.க-.,வுடன் இருப்பதால் தான் காங்கிரஸ் இருப்பதே தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !