/ செய்திகள் / தேர்தல் விதிமீறல்: துரைமுருகன் மீது வழக்குப்பதிவு

தேர்தல் விதிமீறல்: துரைமுருகன் மீது வழக்குப்பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: காட்பாடியில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக, அத்தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான துரைமுருகன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திமுக பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகன், வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் 10 முறை, ராணிப்பேட்டை தொகுதியில் இரு முறை என மொத்தமாக 12 தேர்தலில் போட்டியிட்டு 10 வெற்றிகளை பெற்றவர். இந்த தேர்தலில் காட்பாடியில் போட்டியிடுகிறார்.சென்னையில் இருந்து ரயிலில் காட்பாடி வந்த அவர், திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக புறப்பட்டு நேற்று முன்தினம் மார்ச் 29 ம் தேதி பிரசாரத்தை துவக்கினார். இந்நிலையில், காட்பாடியில் தேர்தலில் விதிமீறலில் ஈடுபட்டதாக அமைச்சர் துரைமுருகன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து அண்ணாதுரை சிலைக்கு பேரணியாக சென்றதில் விதிமீறலில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. நிபந்தனைகளை மீறியது, பேரணியில் பட்டாசு வெடித்தது என துரைமுருகன், கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

shyamnats
ஏப் 01, 2026 08:28

இரு தொகுதிகளில் போட்டியிடுவது, தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை தகுதி நீக்கம் செய்தால் மட்டுமே வேட்பாளர்கள் அடங்குவார்கள் . வெறுமனே எச்சரிக்கை எல்லாம் செல்லுபடியாகாது. நான் அவனில்லை என்று சொல்லிவிட்டு நடையை கட்டி விடுவார்கள்.


Vasan
மார் 31, 2026 23:39

துரைமுருகன் அவரது எதிரி விஷமிகள் பட்டாசு வெடித்திருக்கலாம்.


S Srinivasan
மார் 31, 2026 22:25

what is the use, disqualify his candidature if election commission has right and no fear