8 தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர் வருகை
திருப்பூர்:தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளை பார்வையிடுவதற்காக, தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதிக்கு இரண்டு பேர் வீதம் பொது பார்வையாளர் 4 பேர்; செலவின பார்வையாளர் 4 பேர்; போலீஸ் பார்வையாளர் ஒருவர் என, ஒன்பது பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு, அவிநாசி தொகுதிகளுக்கான பார்வையாளர் சரிஹா மோகன், திருப்பூர் தெற்கு, பல்லடத்துக்கு தர்மேந்திரசிங், தாராபுரம், காங்கயத்துக்கு சுதா வர்மா, உடுமலை, மடத்துக்குளத்துக்கு தினேஷ் ஸ்ரீ வத்சவா நியமிக்கப்பட்டுள்ளனர். செலவின பார்வையாளர்கள், தாராபுரம், காங்கயத்துக்கு, மொசுகண்டி கங்காதர், அவிநாசிக்கு சச்சின் குமார் சிங், திருப்பூர் வடக்கு நிலாய்பங்கர், உடுமலை, மடத்துக்குளத்துக்கு சத்ய நாராயணன் தக்கர் மற்றும் எட்டு தொகுதிகளுக்கு தேர்தல் காவல் பார்வையாளர் ராகுல் ஹெக்டே நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய கூட்டத்தில், தேர்தல் பொது, செலவின பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் மற்றும் எட்டு தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், எஸ்.பி. கிரிஷ் அசோக் யாதவ் மற்றும் தேர்தல் பிரிவினர் பங்கேற்றனர். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகள், வாக்காளர் விவரம், தபால் ஓட்டுக்கு தகுதியானோர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்குகைளை கணக்கிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள். தேர்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள்; மாவட்ட கட்டுப்பாட்டு மையம் என, தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் தொபர்பாக, தேர்தல் பார்வையாளர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே விளக்கம் அளித்தார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
பா.ஜ., எதிர்ப்பே நமக்கு பிரதானம்; த.வெ.க.,வை கண்டுக்க வேணாம்
மார் 20, 2026 01:13 am
நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை! தேர்தல் செலவின பார்வையாளர் எச்சரிக்கை
மார் 19, 2026 06:19 pm