தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள் துவக்கி வைப்பு
விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டசபை தொகுதிக்கான பறக்கும்படை வாகனங்களை, தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணுபிரியா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்பு பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா என கண்காணிக்கவும், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கவும், அனைத்து தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் மூன்று பறக்கும் படைகள், மூன்று நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களுக்கு தனித்தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனை, விருத்தாசலம் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணுபிரியா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த குழுவில், தாசில்தார், பி.டி.ஓ.,க்கள், வேளாண் அலுவலர்கள், போலீசார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தமிழகத்தில் ஏப்ரல் 23ல் சட்டசபை தேர்தல்; மே 4ல் ஓட்டு எண்ணிக்கை
மார் 16, 2026 12:06 am