/ செய்திகள் /  பெங்களூரு டீமை நம்பும் இ.கம்யூ., வேட்பாளர்

 பெங்களூரு டீமை நம்பும் இ.கம்யூ., வேட்பாளர்

கிருஷ்ணகிரியின் தற்போதைய இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரனுக்கு மீண்டும் 'சீட்' வழங்கிய நிலையில், 'மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதால் 75,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்' என பேசி வருகிறார். இவ்வளவு நம்பிக்கை இருந்தும், தன் மீதோ, கட்சியினர் மீதோ நம்பிக்கை இல்லாமல், பெங்களூருவில் இருந்து ஒரு டீமை இறக்கி, அவர்கள் சொல்வதை கேட்டு பணியாற்றுகிறார். எங்கு செல்ல வேண்டும், யாரை சந்திக்க வேண்டும், யார் யாருக்கு என்ன செய்ய வேண்டும், கவுடா சமுதாய ஓட்டுகளை பெறுவது எப்படி என அனைத்துக்கும், பெங்களூரு டீம் சொல்வதையே ராமச்சந்திரன் கேட்கிறார். இது, அவரது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராமச்சந்திரனை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணி சார்பாக பா.ஜ., வேட்பாளர் நாகேஷ்குமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில், தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரனை வீழ்த்துவதில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியாக உள்ளது. அதனால், பயம் காரணமாக, பெங்களூரு டீமை நம்புவதாக கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !