/ செய்திகள் / எங்களை பார்த்தால் பைத்தியமாக தெரிகிறதா? சீமான் ஆவேச கேள்வி

எங்களை பார்த்தால் பைத்தியமாக தெரிகிறதா? சீமான் ஆவேச கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''நடிச்சா மட்டும் போதுமா; நாட்டை கொடுத்து விடுவீர்களா'' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.வந்தவாசியில், தேர்தல் பிரசாரத்தின்போது, அவர் பேசியதாவது: நீங்கள் எதற்கு மொபைல் போன் வைத்துள்ளீர்கள். எத்தனை நாளைக்கு 'ரீல்ஸ்' பார்த்து கொண்டே இருப்பீர்கள். அறிவை தேடி ஓடுங்கள். நடிச்சா போதுமா, நாட்டை கொடுத்து விடுவீர்களா, நடிச்சா நோட்டை கொடுப்போம். நடிப்பதை நிறுத்தி விட்டால், நாட்டை கொடுப்போம் என்றால் உங்களுக்கு அறிவு இருக்கா.எங்களைப் பார்த்தால், பைத்தியமாக தெரிகிறதா. காமராஜர், கக்கன் ஆகியோர் எல்லாம் தலைவர் என்றால், நடிகன் எப்படி தலைவன் ஆவான். கலையை ரசி, போற்று. அவன் கிட்டே நாட்டை கொடுப்பேன் என்றால், தலைவனுக்கும் நடிகனுக்கும் வேறுபாடு தெரியாத தற்குறியா நீ.கேரளா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், திரையரங்கில் தலைவனை தேடவில்லை. ஓட்டை 500, 1000 ரூபாயக்கு விற்பது, வாக்கரிசி வாங்கி தின்பதற்கு சமம். விசிலை ஊதுவதற்கு என்ன செய்தான். திரையரங்கில் ஊதி திரிந்தான். இன்று தெருவில் ஊதி திரிகிறான் அவ்வளவு தான்.சூரியனுக்கு ஓட்டு போட்டால், அவர்கள் வீட்டில் தான் விடிகிறது. இரட்டை இலை, 60 ஆண்டுகளாக மொட்டை இலையாக தான் இருக்கிறது. ஒன்றும் துளிர்விடல. எவன் தோற்றாலும், விவசாயி தோற்றான் என்ற நிலை உருவாகக் கூடாது.என்னை வெற்றி பெற வைக்காமல், தேர்தலுக்கு பின் யாரேனும் மனு எடுத்து வந்தால், கொன்றே விடுவேன். அண்ணே, வீட்டை இடிக்கிறான், நிலத்தை பறிக்கிறான் என்றால், ஓட்டு போடும்போது எங்கே சென்றீர்கள். இந்த பிரச்னையை தருபவர்களே வெற்றி பெறுவது எப்படி?இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சந்திரன்
மார் 30, 2026 08:12

இவரும் ஒரு சினிமாகாரர் என்பதை மறந்தே அல்லது மறைத்தே பேசுகிறார். வெறுப்பின் வெளிப்பாடு தனியாக நின்று எக்காலத்திலேயும் வெல்ல முடியாது. மகாபாரதத்தில் கூட பாண்டவர்கள் பலரை சேர்த்துதான் அநீதி கூட்டணி கௌரவர்களை வெல்ல முடிந்தது. ஒரு சகுனியை எதிர்க்க கிருஷ்ணர் தேவை


அசோகா
மார் 30, 2026 07:31

சந்தேகமேயில்லை


தாமரை மலர்கிறது
மார் 30, 2026 04:24

சீமானின் தம்பிகள் அனைவரும் பைத்தியமாக தெரிவதற்கு இவர் தான் காரணம்.


Govi
மார் 30, 2026 04:20

நிச்சயமாக பைத்தியம் தான் ஆப் மெண்டல்


Kasimani Baskaran
மார் 30, 2026 04:06

சந்தேகம் தேவையற்றது.


nagendhiran
மார் 29, 2026 23:00

நீ மட்டுமே தமிழன் மாதிரியும் மற்ற அரசியல் வாதிகள் அனைவரும் மாற்று மாநிலத்தில் இருந்து வந்த மாதிரியும்? நீ ஆட்சிக்கு வரலைனா விவசாயமே அழிந்துவிடும்னு கூவுவதும்? இறந்தவர்களை வைத்து கதை விடுவதும்? .செய்ய"முடியாத வாக்குறிகளை பேசிட்டு எப்படி செய்வீங்கனு கேட்டா வாய்ப்பு கொடுத்துபாருனு சொல்வதும்?


sankar
மார் 29, 2026 22:28

எங்களை பார்த்தால் பைத்தியமாக தெரிகிறதா? சீமான் ஆவேச கேள்வி காலம் பெசாது பதில் சொல்லும்


V. Rajan
மார் 29, 2026 21:59

தாறுமாறாக சினிமா வசனத்தை அரை குறை தம்பிகளிடம் அள்ளிவிடுகிறார் ... அண்ணாச்சிகளின் தயவால் வண்டி ஓட்டுகிறார் ..